Oct 26, 2026 - 07:41 PM

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL தனது விளையாட்டு வலிமைத்திறனை மீண்டும் உறுதி செய்யும் வகையில், அண்மையில் நடைபெற்ற 41ஆவது வருடாந்த மேர்கன்டைல் தடகள சம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடாகவும் ஒட்டுமொத்த இரண்டாமிடத்தை சுவீகரித்தது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தடகள போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் சுமார் 50 முன்னணி நிறுவனங்களின் 2500 தடகள வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
போட்டிகரமான களத்தில் SLT‑MOBITEL தடகள அணியினர் பல பிரிவுகளில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களின் திரண்ட திறன்கள், ஒழுக்கம் மற்றும் குழுநிலைச் செயற்பாடுகள் போன்றன உறுதியான வெற்றிப் பயணத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், பல விருதுகள் வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்கவும் ஏதுவாக அமைந்திருந்தன. அதனூடாக இலங்கையின் கூட்டாண்மை விளையாட்டுப் பிரிவில் நிறுவனத்தின் ஸ்தானத்தை உறுதியாகப் பேணியிருந்தது.
இந்த சாதனைகளினூடாக, தனது வெற்றிகரமான வியாபார செயற்பாடுகளுடன், விறுவிறுப்பான கூட்டாண்மை கலாசாரத்தை ஊக்குவிப்பதில் SLT‑MOBITEL இன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த சாதனை வெளிப்படுத்தியிருந்ததுடன், களத்திலும், அப்பாலும் ஊழியர்கள் ஊக்கமளிக்கப்பட்டவர்களாக திகழ்வதுடன், ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலை, குழு நிலை செயற்பாடு, ஒழுக்கம், ஊழியர் நலம் ஆகியவற்றை பேணுவதில் நிறுவனம் காண்பிக்கும் ஈடுபாடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
































