Oct 26, 2026 - 08:16 PM

LMD சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகவும் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்களின் தரவரிசையில் Prime Group அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நன்மதிப்பைப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் எனும் கௌரவமிக்க துறைசார் வெற்றியாளர் விருதை வென்றுள்ள இந்நிறுவனம், வணிக விரிவாக்கம், விருப்பத்திற்குரிய பணிச்சூழல் மற்றும் ஊழியர் நலன்புரி ஆகிய பிரிவுகளிலும் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இலங்கையில் எட்டு ஆண்டுகளாக நன் மதிப்பைப் பெற்ற நிறுவனம் எனும் கௌரவிப்பை Prime Group பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வர்த்தகப் புத்தாக்கம், கூட்டாண்மைக் கலாச்சாரம், கூட்டாண்மைச் சுறுசுறுப்புத்தன்மை, கூட்டாண்மை நிலைபேறுதன்மை, நெறிமுறை சார்ந்த பார்வை, தலைமைத்துவப் பின்னணி, தேசிய தொலைநோக்கு, மூலோபாய நோக்கு மற்றும் தரமான விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளிலும் Prime Group பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது. இது அந்நிறுவனத்தின் பரந்த அளவிலான சாதனைகளையும், சிறப்பம்சங்களை நோக்கிய அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், Prime Group காணி, வீடமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளடங்கிய தனது பலதரப்பட்டத் திட்டங்களின் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. 18 மாவட்டங்களில் தனது தடத்தைப் பதித்துள்ள இந்நிறுவனம், 10,000க்கும் மேற்பட்ட காணித் திட்டங்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட வீடமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களுடன், வாடிக்கையாளர்கள் சொத்துக்களைச் சொந்தமாக்குவதற்கும், தங்களது எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கும், புதிய வாழ்க்கை முறைகளைத் தழுவுவதற்கும் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.
Prime Group ஐப் பொறுத்தவரை, இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டமை, சாதாரண ஒரு துறைசார் விருதுக்கும் அப்பாற்பட்டதொன்றாகும். இது பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையையும், மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் நிலையான மதிப்பினை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
பல்வேறுபட்ட சொத்துப் பிரிவுகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறைகளை உள்ளடக்கிய திட்டத் தொகுப்பில் இத் தொலைநோக்கு பிரதிபலிக்கின்றது. சர்வதேச அரங்கில் இலங்கையின் ரியல் எஸ்டேட் சந்தையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்முகப்பு அபிவிருத்தித் திட்டமான கொழும்பு போர்ட் சிட்டியிலுள்ள Prime Marina முதல் YOLO Kiribathgoda மற்றும் Venezia Negombo வரை, அந்நிறுவனம் நவீன கால வாழ்வியலின் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து கண்டறிந்து வருகின்றது. Elizabeth Colombo 07, Monvie Colombo 05 மற்றும் The Golf Colombo 08 உள்ளிட்ட நிறுவனத்தின் உயர்தர அபிவிருத்தித் திட்டங்கள், பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் குடியிருப்புப் பிரிவுகளில் அதன் இருப்பை மேலும் வெளிப்படுத்துகின்றன.
இந்த கௌரவிப்பு தொடர்பில் Prime Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை, இத்தனை ஆண்டுகளாக எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைகின்றது. எமது திட்டத் தொகுப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து வரும் வேளையில், இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை சர்வதேச தளத்திற்கு உயர்த்துவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான நன்மைகளையும் மதிப்பையும் உருவாக்குவதே எமது முதன்மைத் தொலைநோக்காக உள்ளது. எங்களது சிறப்பம்சமிக்க பாரம்பரியத்தை மேலும் பலப்படுத்தி, இலங்கை ரியல் எஸ்டேட் துறையை உலகிற்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியுடன் செயல்படுகின்றோம்.” என்றார்.
இத் துறை மேம்பட்டு வரும் நிலையில், புத்தாக்கம், பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வென்றெடுக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகத் தனது பாரம்பரியத்தை மேலும் பலப்படுத்துவதில் Prime Group உறுதியாக கவனம் செலுத்தி வருகின்றது. LMD சஞ்சிகையினால் வழங்கப்பட்டுள்ள இந்த அண்மைய அங்கீகாரங்கள், இந்நிறுவனத்தின் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல் நிறுவனத்தை வழிநடத்தி வரும் விழுமியங்களையும் மீள உறுதிப்படுத்துகின்றன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம். வளர்ந்து வரும் சாத்தியக்கூறுகளின் திட்டத் தொகுப்பு. நம்பிக்கையின் மீது கட்டியெழுப்பப்பட்ட நற்பெயர். Prime Group புதிய வாய்ப்புகளை உருவாக்கியும், வாழ்க்கை முறைகளை மறுவரைறை செய்தும், இலங்கை ரியல் எஸ்டேட் துறையை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் சென்றும் அத்துறையின் எதிர்காலத்தைத் தொடர்ந்து வடிவமைத்து வருகின்றது.
































