Oct 26, 2026 - 07:52 PM

இலங்கையின் தென்கரையிலுள்ள அஹங்கம, கபலானா கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையோர சிறிய நவீனரக ஹோட்டலான மொஸ்வோல்ட் வில்லா, [Mosvold Villa] தேசிய புவியியல் பயணியர் [National Geographic Traveller] (UK) இதழின் 2026 ஆகஸ்ட் மாத இந்து சமுத்திரத் தொகுப்புகள் சிறப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த அனுசரணையுடனான சிறப்புக் கட்டுரையில், நிதானமாகப் பொழுதைக் கழிக்கவும், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடவும், இலங்கையின் தென்கரையையும் அதன் தனித்துவங்களையும் அறிந்துகொள்ளவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற தங்குமிடமாக மொஸ்வோல்ட் வில்லாஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அஹங்கம நீண்டகாலமாகவே அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கபலானா கடற்கரையின் மணற்பரப்பை ஒட்டியவாறு அமைந்துள்ள இந்த ஹோட்டலில், இந்து சமுத்திரத்தின் அழகிய காட்சிகளை ரசிக்கும் வகையில் 16 அறைகளும் சொகுசுத் தங்குமிடங்களும் உள்ளன. இவற்றில் Founder’s Suite எனப்படும் சிறப்புத் தங்குமிடத்தில் தனிப்பட்ட முடிவிலிக் குளமும் அமைந்துள்ளது.
இங்கு வழங்கப்படும் உணவு வகைகள் இலங்கையின் கரையோர சமையல் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டவை. தினமும் புதிதாகக் கரைக்குக் கொண்டுவரப்படும் கடலுணவுகளைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்தப் பிரதேசத்தின் உணவுக் கலாசாரத்தையும் தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சமையலறை செயல்படுகிறது.
இலங்கைப் பண்பாட்டுடன் ஒன்றிணைந்த, உடல், மனம் மற்றும் உள்ளத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விடுமுறை அனுபவத்தை வழங்குவதே மொஸ்வோல்ட் வில்லாவின் நோக்கமாகும். நட்சத்திரத் தரத்திலான சேவைகளுடன், தனிப்பட்ட இல்லமொன்றில் தங்கியிருப்பதைப் போன்ற நெருக்கமான சூழலையும் இது வழங்குகிறது. சமையலறை, வரவேற்பு அலுவலகம் முதல் தோட்டப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பிரிவுகள் வரை பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பே இந்த அனுபவத்தைச் சாத்தியமாக்குகிறது.
இந்த வில்லாவில் 43 பேர் பணியாற்றுகின்றனர். சுமார் 185 பணியாளர்களைக் கொண்ட மொஸ்வோல்ட் நிறுவன குழுமத்தின் ஒரு பகுதியாக இவர்கள் உள்ளனர். குழுமம், தனது ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள சமூகங்களிலிருந்தும் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் அஹங்கமவுக்கு அப்பாலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உள்ளூர் குடும்பங்களைப் பொறுத்தவரையில், இது தமது வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. குழுமத்தின் விருந்தோம்பல் சேவைகளைத் தனித்துவமானதாகவும் தனிப்பட்ட அக்கறை நிறைந்ததாகவும் தொடர்ந்து பேணுவதில் அதன் பணியாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழுமம் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நிலையிலும், இந்த மனிதநேய அணுகுமுறையைத் தொடர்ந்து முன்னெடுப்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
தென் மாகாணத்திலுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம், இளைஞர்கள் விருந்தோம்பல் துறையில் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளை மொஸ்வோல்ட் குழுமம் ஏற்படுத்தி வருகிறது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. வகுப்பறைக் கற்றலுக்கு அப்பால், நடைமுறை அனுபவத்தின் ஊடாகத் தொழில்சார் திறன்களை வளர்ப்பதற்கு இத்திட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. மொஸ்வோல்ட் நிறுவனத்தில் இணையும் ஒவ்வொருவரும் தமது தொழில்வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இங்கு பணியாற்றும் பலர் நீண்டகாலத் தொழில்வாழ்க்கையை உருவாக்கியுள்ளனர். சமையலறை மற்றும் பராமரிப்புப் பிரிவுகளில் ஆரம்பநிலை ஊழியர்களாக இணைந்த சிலர், இன்று உயர் பதவிகளுக்கு முன்னேறியுள்ளனர். மேலும் சிலர், குழுமத்தின் அனைத்துச் சொத்துகளையும் உள்ளடக்கிய முகாமைத்துவப் பொறுப்புகளுக்கு உயர்ந்துள்ளனர். இவர்களின் அனுபவங்கள், மொஸ்வோல்ட் நிறுவனத்தில் தொழில்வாழ்க்கையை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. குழுமத்துக்குச் சொந்தமான நான்கு ஹோட்டல்களிலும் இத்தகைய முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குவதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
மொஸ்வோல்ட் நிறுவனத்தில் திறமைகளை அங்கீகரித்து, அவற்றை மேலும் வளர்ப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். எமது ஊழியர்களே எமது மிகப் பெறுமதியான சொத்தாகும். ‘Significantly You’ என்ற எமது தொலைநோக்குப் பார்வை, ஒவ்வொரு விருந்தினரையும் அன்புடன் வரவேற்கும் எமது குழுவினரின் ஊடாகவே உயிர்பெறுகிறது” என மொஸ்வோல்ட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலங்க மார்டினஸ் தெரிவித்தார்.
மொஸ்வோல்ட் ஹோட்டல்ஸ் நிறுவனம் 2012ஆம் ஆண்டு அஹங்கமவில் தனது முதலாவது ஹோட்டலைத் திறந்ததுடன், தற்போது நான்கு ஹோட்டல்களை நடத்தி வருகிறது.மொஸ்வோல்ட் வில்லா அஹங்கம, வெல்ஹெங்கொட 38ஆம் இலக்க முகவரியில் அமைந்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: mosvoldhotels.com
































