Oct 26, 2026 - 09:01 PM

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளுக்குக் கிடைத்த தீவிர மழைவீழ்ச்சியுடன், பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் நதி நீர்மானித் தரவுகளின் பகுப்பாய்வின்படி, அடுத்த சில மணித்தியாலங்களில் பின்வரும் பிரதேசங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தீவிர அபாயம் காணப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்:
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கெடை, ஜா-எல, கட்டான, வத்தளை
இந்த நிலைமையை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும், அப்பகுதிகளூடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
































