Oct 26, 2026 - 06:52 PM

விமான சேவை விநியோகத் தொடர், உதிரிப்பாக முகாமைத்துவம் மற்றும் விமான ஆயுட்கால தீர்வுகள் ஆகியவற்றில் தங்களிடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, Vietjet மற்றும் எயார்பஸ் சேவைகள் நிறுவனமான Satair ஆகியன மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற வியட்நாம் - டென்மார்க் வர்த்தக மன்ற நிகழ்வின் போது, வியட்நாமின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான தோ லேம், டென்மார்க்கின் பத்தாம் பிரெட்ரிக் மன்னர் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த உயர் மட்டப் பிரமுகர்கள் முன்னிலையில் இக் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், Vietjet கொழும்பு வரை விரிவாக்கி வரும் தனது சேவை வலைப்பின்னலின் செயற்பாட்டு அடித்தளத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்துகின்றது. இந்நிறுவனம் கொழும்புக்கும் Ho Chi Minh City க்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகளை ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு மூன்று முறை என்ற அடிப்படையில் தொடங்கியது. அத்துடன், கொழும்பு வழியிலான Ho Chi Minh City - மாலைதீவு இடையிலான புதிய சேவை 2026 டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது இலங்கையிலிருந்து மாலைதீவுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காண்மையில் ஒரு புதிய மைல்கல்லை இந்த ஒப்பந்தம் குறிக்கின்றது. இது Satair இன் உலகளாவிய விமானப் போக்குவரத்து விநியோகம் மற்றும் சேவைத் திறன்களை, Vietjet இன் அதிகரித்து வரும் விமானத் தொடர், சர்வதேச சேவை வலைப்பின்னல் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் தேவைகளுடன் இணைப்பதுடன், வியட்நாமின் விமானப் போக்குவரத்து விநியோகத் தொடர் திறன்களை வலுப்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.
Vietjet இன் வளர்ந்து வரும் Airbus விமானத் தொடர் கட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் தற்போதைய IMS திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட உதிரிப்பாகத் தீர்வுகள், டிஜிட்டல் செம்மையாக்கம் மற்றும் செயற்பாட்டு மீள்தன்மை ஆகியவற்றை ஆராய்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்த மூலோபாய ஒப்பந்தம் முன்வைக்கின்றது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில், இரு நிறுவனங்களும் இணைந்த பணியாற்றல் குழுவை நிறுவ எதிர்பார்ப்பதுடன், அதனூடாக பின்வருவன அடங்கலாக ஆறு பிரதான பிரிவுகளில் இணைந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்தவும் மதிப்பீடு செய்யவுமுள்ளது:
IMS இன் விரிவாக்கம்: வியட்ஜெட் இன் அதிவேகமான விமானத் தொடர் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சர்வதேச சேவை வலைப்பின்னல் வளர்ச்சிக்கு ஏற்ப, உதிரிப்பாகங்களின் இருப்பு, கொள்முதல், திட்டமிடல் மற்றும் சரக்கு இருப்பு நிலைப்படுத்தல் உள்ளிட்ட தற்போதைய IMS திட்டத்தை செம்மையாக்கல்.
Long Thanh விமான மைய விருத்தி: வியட்ஜெட் இன் செயற்பாட்டு வசதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, Long Thanh சர்வதேச விமான நிலையத்தில் ஒப்படைப்பு இருப்புத் திறன்கள், உதிரிப்பாக ஆதரவு மற்றும் விமானப் போக்குவரத்துத் தளவாடங்கள் தொடர்பான தீர்வுகளை ஆராய்தல்.
ஆகாய விமான ஆயுள்சுழற்சி மற்றும் சுழற்சித் தீர்வுகள்: விமானத்தின் ஆயுட்காலப் பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலி நிலைபேறுதன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, பயன்படுத்தப்பட்ட சேவைக்குரிய உதிரிப்பாகங்கள் (USM), பாகங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பரிமாற்றச் சேவைகள், மற்றும் மேலதிகச் சரக்கு இருப்பு முகாமைத்துவம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு: உதிரிப்பாகங்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், விமானத் தொடர் பராமரிப்புப் பணிப்பாய்வுகளை உகந்ததாக்கவும், மேம்பட்ட பகுப்பாய்வு, கூட்டுத் தரவு ஒருங்கிணைப்பு மற்றும் முன்கணிப்புத் தேவைத் திட்டமிடல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்துதல்.
மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு ஆதரவு: உயர் இயக்க நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, AOG பதில்முறை நடைமுறைகளை வலுப்படுத்துதல், பிராந்திய அளவிலான உதிரிப்பாக இருப்பு நிலைப்படுத்தல் மற்றும் அவசரகாலத் தளவாட ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
ஆற்றல் கட்டியெழுப்பல் மற்றும் பயிற்சி: வியட்நாமில் விமானப் போக்குவரத்து விநியோகச் சங்கிலி முகாமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக, துறைசார் நிபுணத்துவம், தொழில்நுட்ப அறிவப் பகிர்வு மற்றும் நிபுணத்துவ மேம்பாட்டு முயற்சிகளைப் பரிமாறிக்கொள்ளுதல்.
Satair பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் ஸ்டொட்டார்ட், கருத்துத் தெரிவிக்கையில்: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், Vietjet உடனான எமது வளர்ந்து வரும் பங்காண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றது. ஏற்கனவே நிறுவப்பட்ட எமது IMS அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், Vietjet இன் விமானத் தொடர் கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஆதரவை வழங்கவும், அதன் நீண்டகால வளர்ச்சி இலட்சியங்களை உறுதிப்படுத்தும் வகையில் அளவிடக்கூடிய, நிலைபேறான மற்றும் தரவு அடிப்படையிலான விநியோகச் சங்கிலித் தீர்வுகளைக் கூட்டு முயற்சியுடன் உருவாக்கவும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Vietjet பிரதம நிறைவேற்று அதிகாரி குயேன் தான்ஹ் சன் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு சுறுசுறுப்பான மற்றும் திறமையான விநியோகச் சங்கிலி, Vietjet இன் விமான தொடர் கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேச சேவை வலைப்பின்னல் விரிவாக்கம் மற்றும் பயணிகள் சேவைகளின் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றுக்கு மிக அத்தியாவசியமானதாகும். Satair நிறுவனத்துடனான எமது பங்காண்மை, Long Thanh சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட மூலோபாய உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்குத் தயார்படுத்தும் அதே வேளையில், எமது செயற்பாடுகள் மற்றும் பராமரிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக எயார்பஸ் நிறுவனத்தின் உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் விநியோகச் சங்கிலித் திறன்களைப் பயன்படுத்திக் கொள்ள எமக்கு வழிவகுக்கின்றது. மேலும், உள்ளூர் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதோடு வியட்நாமில் விமானப் போக்குவரத்துத் திறமைகளை வளர்த்தெடுக்கவும், இதன் மூலம் இத்துறைக்கான மேலும் நிலைபேறான எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் 'சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம்' எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com.

































