Oct 26, 2026 - 06:48 PM

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, The Extra Mile எனும் கருப்பொருளின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான வாடிக்கையாளர் சேவை வாரத்தை SLT கேட்போர்கூடத்தில் ஆரம்பித்து வைத்து, விதிவிலக்கான வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒக்டோபர் 5 முதல் 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்நடவடிக்கையானது, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தனது கலாச்சாரத்தை வலுப்படுத்துவதிலும், ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதிலும், தனது அனைத்து செயல்பாடுகளிலும் சேவைச் சிறப்பம்சத்தை மேம்படுத்துவதிலும் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை எடுத்தியம்பியது.
அர்த்தமுள்ள வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்காக எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களின் சேவையைப் பாராட்டிய இவ் வாரம், தனது Residential, Enterprise மற்றும் SME வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் கொண்டுள்ள மதிப்புமிக்க உறவுகளின் முக்கியத்துவத்தை மீள நினைவூட்டியிருந்தது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக நேரடியாகச் செயற்படும் வாடிக்கையாளர் சேவை அணிகள் மற்றும் திரைமறைவில் உழைக்கும் உள்ளக வாடிக்கையாளர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் இவ் வாடிக்கையாளர் சேவை வாரம் அங்கீகரித்தது. சேவைச் சிறப்பம்சம், நிறுவனத்தின் உள்ளிருந்தே தொடங்குகிறது என்ற SLT-MOBITEL இன் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், சீரான மற்றும் நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் ஒத்துழைப்பு, குழுப்பணி மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நடவடிக்கை வலியுறுத்தியது.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவை விநியோகத்தை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, SLT-MOBITEL சேவைச் சிறப்பம்ச சவால் பட்டறை மற்றும் விருது வழங்கும் விழாவை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தியது. 2026 ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்ற இச்சவாலில், Enterprise Help Desk), Service Assurance Team, SD-WAN செயல்பாடுகள், Managed Services Operations மற்றும் Managed Security Operations ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியமான போட்டித்தன்மை, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் கையாளுதல் ஆகியவற்றை ஊக்குவித்த இப்போட்டியில், பங்கேற்ற ஒவ்வொரு குழுவிலிருந்தும் சிறந்த திறனை வெளிப்படுத்திய மூன்று வெற்றியாளர்களுக்கு அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இத்திட்டத்தில் SLT-MOBITEL ஊழியர்களுக்கான மென்-திறன் விருத்திப் பயிலரங்கும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாடல், தனிநபரிடைத் திறன்கள், தன்னம்பிக்கை, குழுப்பணி மற்றும் தொழில்முறை வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இந்நடவடிக்கையானது ஊழியர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதிலும், அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிப்பதிலும், தனது என்டர்பிரைஸ் செயல்பாடுகள் முழுவதும் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதிலும் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியது.
மேலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தினசரி வாடிக்கையாளர் தொடர்பாடல்களை மேலும் இலகுவாக்கவும், சேவைச் சிறப்பம்சத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் SLT-MOBITEL இவ் வாரத்தில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 41 பிராந்திய அலுவலகங்களில் நடைபெற்ற பாராட்டு விழாக்களின் போது, நிறுவனத்தின் மீது பல வருடங்களாக வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில் நீண்டகால மற்றும் உயர்மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்பில் இருக்கவும், சிறந்த ஒட்டுமொத்த சேவை அனுபவத்தைப் பெறவும் அவர்களுக்கு இலவசத் தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், 'SLT-MOBITEL Life Stores' விற்பனை நிலையங்கள் தெரிவு செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கு பிரத்தியேக தள்ளுபடிகளை வழங்கியதன் மூலம், இவ் வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக மதிப்புமிக்க நன்மைகளை அளித்தன.
பிராந்திய செயல்பாடுகள் மற்றும் முதன்மை வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் வாடிக்கையாளர் சேவை அனுபவச் சிறப்பம்சத்தை வழிநடத்தும் தலைவர்களைக் கௌரவிக்கும் பிரத்தியேக நிகழ்வுடன் இவ் வாரம் நிறைவுற்றது. இந்நிகழ்வானது அணிகளை ஒருங்கிணைத்து, ஒத்துழைப்பை ஊக்குவித்ததுடன், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அனுபவங்களை வழங்குவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் மீண்டும் புதுப்பித்தது.
2026 ஆம் ஆண்டிற்கான வாடிக்கையாளர் சேவை வாரத்தின் ஊடாக, SLT-MOBITEL தனது பணியாளர்களை வலுப்படுத்தவும், பாராட்டும் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை உள்வாங்கவும், ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உண்மையான நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த சேவை அனுபவங்களை வழங்கி வருகின்றது.

































