Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சூர்யாவின் 50-வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

Sep 7, 2026 - 10:47 AM

சூர்யாவின் 50-வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
Mobitel Inner 1278

நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்படுகிறது. 

இந்த புதிய படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இணைப்பாக (எல்.சி.யூ.) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு இந்த ஆண்டு ராசியான ஆண்டாகவே இருக்கிறது. 

தொடர்ச்சியாக படங்கள் விமர்சிக்கப்பட்ட நிலையில் 'கருப்பு'. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார் சூர்யா. 

தற்போது ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா 47' படத்தில் நடித்து வரும் அவர், தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் 'சூர்யா 48' படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இப்படம் தற்காலிகமாக 'சூர்யா 49' என அழைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில் சூர்யாவின் 50-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்படுகிறது. 

'விக்ரம்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருந்தார். 

இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த புதிய படம் தயாராகலாம் என்றும், இதுவும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இணைப்பாக (எல்.சி.யூ.) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

படத்துக்கு பெயர் 'ரோலக்ஸ்' தானா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278