Sep 17, 2026 - 05:06 PM

Update - 5.10PM
தெமட்டகொடை களு பாலத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
……………………….
தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





























