Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
பேலியகொடை மேனிங் வர்த்தக வளாகத்தில் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்த நடவடிக்கை

Sep 5, 2026 - 11:23 PM

பேலியகொடை மேனிங் வர்த்தக வளாகத்தில் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்த நடவடிக்கை
Mobitel Inner 1278

பேலியகொடை மேனிங் வர்த்தக வளாகத்தில் முறைசாரா முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதற்காக புதிய திட்டமொன்றை ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

இதன்கீழ், அடையாளங்காணப்பட்ட வர்த்தகர்களுக்கு முறைசார்ந்த நடமாடும் வர்த்தகக் சாவடியொன்றும், அதற்குரிய விசேட பொருட்கள் அடங்கிய தொகுதியும் இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான நடமாடும் வர்த்தகக் சாவடி மற்றும் அதற்குரிய பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கும் நிகழ்வு நேற்று (04) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் புதிய மேனிங் வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. 

இதன்மூலம் நுகர்வோருக்கு சுத்தமான மற்றும் உயர்தரமான உணவை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், புதிய மேனிங் வர்த்தக வளாகத்திற்குள் நடமாடும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278