Header Logo
Vallibel FD
Selan Bank
இந்தியா
கேரளாவில் ​ கோர விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பலி

Sep 5, 2026 - 02:02 PM

கேரளாவில் ​ கோர விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பலி
Mobitel Inner 1278

கேரளாவில் ​லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 

அப்பகுதியில் வீதியோரம் சரக்கு லொறி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு சுமார் 11:40 மணியளவில் அந்த வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். 

இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் வைத்தியக் கல்லூரி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. 

இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்றும், குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்து லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278