Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'சித்தா' பட இயக்குநருடன் இணைந்த கமல்ஹாசன்!

Sep 3, 2026 - 05:10 PM

'சித்தா' பட இயக்குநருடன் இணைந்த கமல்ஹாசன்!
Mobitel Inner 1278

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து சண்டை கலைஞர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234 ஆவது படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் அப்படம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் கமல் அறிவித்தார். அதே ரஜினியை வைத்து 'தர்மன்' படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசன் அந்தப் படம் முடிந்த பிறகு கமல் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

இதற்கிடையே தான், சித்தா திரைப்படத்தை இயக்கிய சு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனுக்கு அருண் குமார் கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளிவந்தது. 

தற்போது அது உறுதியாகியுள்ளது. அருண் குமார் படத்தில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட 'லுக் டெஸ்ட்' புகைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டு கமல் மற்றும் அருண் குமார் பெயர்களைப் பதிவிட்டுள்ளது. 

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கையில் கத்தியுடன் கமல் நடப்பது போன்ற புகைப்படம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278