Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

Sep 3, 2026 - 04:00 PM

விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
Mobitel Inner 1278

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான இவ்வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். 

அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278