Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!

Sep 1, 2026 - 11:11 AM

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!
Mobitel Inner 1278

நேபாள வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண் ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. அங்கே நீர்மின் நிலையங்களில் சிக்கிய 933 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

நேபாளத்தில் இமயமலை பிராந்தியத்தில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி இருக்கிறது. வீதிகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், தொலைபேசி கோபுரங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்துக்கு இரையாகி உள்ளன. 

மேலும் ஆற்றின் போக்கில் உள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் அங்கு வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் அங்கு இருந்து சுற்றுலா சென்றிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். 

இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து மீட்கப்படும் உடல்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. 

அந்தவகையில் நேற்று (31) நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. 

அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் சிக்கியிருந்த 279 பேர் மீட்கப்பட்டனர். 

இந்த பணிகளில் நேபாள இராணுவ என்ஜினீயர்கள் நவீன தளவாடங்களுடன் மீட்புப்பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அப்பர் திரிசூலி-3ஏ பகுதியில் மட்டும் 90 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே திபெத்திலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 550 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடந்து வருகின்றன. 6 நாட்களாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 

இதில் இந்தியா, சீனா, ரஷியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கணிசமாக மீட்கப்பட்டு உள்ளனர். 

நேபாள பேரிடர் நிகழ்ந்து 6 நாட்களை கடந்த பின்னரும் சுமார் 4,500 பேரின் கதி என்ன? என்று தெரியாததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278