Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு

Aug 29, 2026 - 04:56 PM

முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு
Mobitel Inner 1278

பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றபோது முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போயிருந்தவர் என பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் ஹொரணை, கனன்வில பகுதியைச் சேர்ந்த மதுர ஜினேந்திர எனும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி தாமரை மலர்களைப் பறிப்பதற்காக பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள உப கால்வாயில் இறங்கியுள்ளதாகவும், அங்கு அவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். 

இது தொடர்பில் பிரதேசமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய மீட்பு பணிகள் இடம்பெற்ற போதிலும், அது பலனளிக்கவில்லை. 

இன்று (29) நண்பகல் அந்நபரின் சடலம் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயில் மிதந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

சடலத்தின் தலைப்பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் முதலைத் தாக்குதலுக்கு இலக்கானதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவ இடத்திலான விசாரணைகளை நுகேகொட குற்ற புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278