Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணைகள் முடிவு!

Aug 28, 2026 - 04:22 PM

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணைகள் முடிவு!
Mobitel Inner 1278

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கான தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் "ஊழல்" எனும் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். 

அவர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக ஒரு நாளை வழங்குமாறும் இதன்போது அந்த அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். 

சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார். 

அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் ஆணைக்குழுவிற்குப் பணித்தார். 

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாயப் பணிகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது, தனக்கு அரசியல் ரீதியில் அனுதாபமுள்ள ஊழியர்களைத் தெரிவு செய்து அனுப்பியதன் மூலம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278