Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Green Lanka Towers வணிக விரிவாக்கத்திற்காக புதிய மூலதனத்தை ஈர்க்க திட்டம்!

Aug 24, 2026 - 11:49 AM

Green Lanka Towers வணிக விரிவாக்கத்திற்காக புதிய மூலதனத்தை ஈர்க்க திட்டம்!
Mobitel Inner 1278

இலங்கையின் வணிக ரியல் எஸ்டேட் துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக தனது பெயரை உயர்ந்த இடத்தில் பதித்து, சந்தையில் வலுவான நிலையை பேணி வரும் Green Lanka Property Developer (GLPL) நிறுவனம், தற்போது தனது வணிகச் செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு புதிய வளர்ச்சிப் பாதைக்கு உத்தியோகபூர்வமாக காலடி எடுத்து வைத்துள்ளது. பங்கு மறுசீரமைப்பு, புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் சொத்துகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த புதிய வளர்ச்சியானது திட்டமிடப்பட்டுள்ளது. 

கொழும்பு 02, நவம் மாவத்தையில் அமைந்துள்ள தமது பிரதான அலுவலகமான Green Lanka Towers, 100% கடன் சுமைகளற்ற பங்குகளுடன், தனது இருப்புநிலையை (Balance Sheet) மேலும் பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எவ்வித நிதி கடப்பாடுகளும் இன்றி, முழு அதிகாரத்துடன் சுயமாக இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. 

நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த Green Lanka Property Developer நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராஜு ராதா, ரியல் எஸ்டேட் என்பது வெறுமனே கட்டடங்கள், செங்கற்கள், அமைவிடங்கள் பற்றியது மாத்திரமல்ல. வணிக நிறுவனங்களின் தேவைகளை ஆழமாகப் புரிந்து, அவை வெற்றி பெறுவதற்கு ஏற்ற தொழில்முறை சூழலை உருவாக்குவதே இதன் முதன்மையான நோக்கமாகும். கப்பல் போக்குவரத்து, சொத்து முகாமைத்துவம், வணிகத் துறைகளில் நாம் கொண்டுள்ள பல தசாப்த கால அனுபவமானது, சந்தையைப் பற்றிய தெளிவான தூரநோக்கை எமக்கு வழங்கியுள்ளது. என்றார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது நீண்டகால வணிகப் பங்காளியாக விளங்கும் ஆசியாவின் முன்னணி தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ விஜய் ஈஸ்வரனுடன் (Dato Sri Vijay Eswaran) இணைந்து புதிய மூலதனத்தைத் திரட்டுவது குறித்து ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இலங்கையுடனான அவரது தொடர்பும், அவரது பிடிப்பும் இதற்கு ஒரு காரணமாகுமென அவர் குறிப்பிட்டார். 

உலகின் 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது வணிக பரவலாக்கத்தை விரிவுபடுத்தியுள்ள டத்தோ ஸ்ரீ விஜய் ஈஸ்வரன், இலங்கையில் போர்ச் சூழல் நிலவிய கடினமான காலப் பகுதியிலேயே நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீடுகளை செய்தவர் ஆவார். இலங்கையில் வேரூன்றியுள்ள அவரது நம்பிக்கையானது, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் திறன்கள் மீது இன்றும் தொடர்வதாக ராஜு ராதா சுட்டிக்காட்டினார். 

இந்த மூலதன திரட்டல் முயற்சியானது, புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதோடு, தற்போதுள்ள சொத்து நிலையை மேம்படுத்தவும், கொழும்பில் மாற்றமடைந்து வரும் வணிக ரியல் எஸ்டேட் துறையை பயன்படுத்த ஒரு வாய்ப்பாகவும் GLPL நிறுவனத்திற்கு அமையும். கொழும்பின் ரியல் எஸ்டேட் துறை புதிய வேகத்தைப் பெற்று வரும் இவ்வேளையில், இந்த கூட்டாண்மையானது உள்நாட்டு ரியல் எஸ்டேட் துறையில் ராதா கொண்டுள்ள விசேடத்துவத்தையும், ஈஸ்வரனின் சர்வதேச வணிகத் திறன் மற்றும் இலங்கை மீதான நீண்டகால நம்பிக்கையையும் ஒன்றிணைத்து, GLPL நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். 

Green Lanka Towers நிறுவனத்தை தன்னிறைவாக சுயமாக செயற்படும் ஒரு சொத்தாக மாற்றுவதானது, அது நெகிழ்வுத் தன்மையுடன் சிறப்பாக செயற்பட வழியை ஏற்படுத்தும். நிறுவனத்தின் நிர்வாகம் இதற்கான வசதிகளை வழங்கவும், நிறுவன செயற்பாட்டுக்கான இடங்களுக்கான தேவை கொண்டோருக்காக வடிவமைக்கப்பட்ட வணிக ரியல் எஸ்டேட் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதோடு, புதிய முதலீடுகள் மற்றும் புதிய சொத்துகளின் கையகப்படுத்தல்கள் மூலம் அதன் இருப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அமைக்கிறது. 

அண்மையில், நாட்டின் முன்னணி வங்கியான NDB Bank மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்திற்குச் சேவை வழங்குகின்ற BPO நிறுவனம் ஆகியன கிரீன் லங்கா டவர்ஸில் தங்களது அலுவலகங்களை அமைத்துள்ளன. வெறுமனே அலுவலக அமைவிட பரப்பளவை மாத்திரம் பார்க்காமல், கட்டட உரிமையாளரின் ஸ்திரத்தன்மை, நவீன உட்கட்டமைப்பு மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் முன்னணி நிறுவனங்கள் கிரீன் லங்கா டவர்ஸைத் தெரிவு செய்து வருகின்றமையானது குறிப்பிடத்தக்க விடயமாகும். உயர்மட்ட வாடிக்கையாளர்களின் இந்த இணைவானது கொழும்பின் மாறிவரும் சந்தை நிலைமையை பிரதிபலிக்கிறது. 

வலுவான நிதித் தளம், சர்வதேச வணிகக் கூட்டாண்மை மற்றும் நவீன வணிக தேவைகள் பற்றிய தெளிவான புரிதல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கையின் புதிய பொருளாதார மாற்றத்தில் முக்கிய பங்கை வகிக்க GLPL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் நிலை மேம்பாட்டு வாய்ப்புகள், மூலோபாய கையகப்படுத்தல்கள் மற்றும் நவீன வசதிகளை உருவாக்குவதன் மூலம் வணிக ரியல் எஸ்டேட் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாக தக்கவைக்க நிறுவனம் தயாராகி வருகிறது. 

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயமானது, வளர்ச்சி மற்றும் எழுச்சிக்கு ஏற்ப மாற்றமடைவதை கருத்திற்கொண்டு, கொழும்பின் முக்கிய வணிகப் பகுதிகளில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, கிரீன் லங்கா டவர்ஸ் வளாகமும் அதிநவீன வசதிகளுடன் தனது தளத்தை தயார்படுத்தி புதுப்பித்து வருகிறது. 

வலுவான மூலதன ஆதரவுடனும், மேலதிக மூலதனத்தை திரட்டுவதனை ஆராய்வதன் மூலமும், நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால சேவையை வழங்கும் அதே வேளையில், கொழும்பில் உள்ள தனது சொத்துத் தளத்தை மிக ஆற்றல்மிக்கதாகவும், வசதிகளை கொண்டதாக மேம்படுத்தவும், சாத்தியமான மூலோபாய கையகப்படுத்தல்களை ஆராயவும் GLPL நிறுவனம் நோக்காக் கொண்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278