Header Logo
Vallibel FD
Selan Bank
இந்தியா
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்

Aug 22, 2026 - 08:23 AM

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்
Mobitel Inner 1278

அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் தயாரித்து வழங்க 2 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் அரசு வைத்தியசாலைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. 

இதில் ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன. 

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜோய் அலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது. 

மற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது. 

இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வருகிற செப்டம்பர் 15ஆம் திகதி தொடங்கி வைக்கப்பட உள்ளதால், ஜூன் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேலே குறிப்பிட்ட குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜோய் அலுக்காஸ் நிறுவனத்திற்கும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278