Jul 17, 2026 - 04:23 PM
சூர்யாவின் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 300 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
சூர்யா நடிக்கும் 46 ஆவது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி'யின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரும் போஸ்டர்களும், இது ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதை உணர்த்துகின்றன.
படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகிறது. இதற்கிடையே, தற்போது, இப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
அதாவது படம் வெளியாவதற்கு முன்பே, முன்பதிவு மூலம் 300 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் 300 கோடி ரூபா வசூலை குவித்த நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படம் ரிலீசுக்கு முன்பே 300 கோடி ரூபா வசூலை எட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.





























