Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
விடைபெற்றார் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Jul 16, 2026 - 10:05 PM

விடைபெற்றார் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
Mobitel Inner 1278

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், Khalid Hamoud Nasser Alkahtani தமது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பானது இன்று (16) அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார். 

அத்துடன், 'டித்வா' புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்காகச் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்திற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். 

சவூதி அரசாங்கத்தின் நிதி அனுசரணையிலான செயற்திட்டங்களின் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். 

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் தூதுவர் அல்-கஹ்தானி நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278