Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
ஹர்திக் பாண்டியாவை வாங்க, தோனி போட்ட மாஸ்டர் பிளான்!

Jul 15, 2026 - 05:54 PM

ஹர்திக் பாண்டியாவை வாங்க, தோனி போட்ட மாஸ்டர் பிளான்!
Mobitel Inner 1278

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை வாங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

 

ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றால், ஷிவம் துபேவுடன், ஆயுஷ் மாத்ரேவும் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திட்டவட்டமாக கேட்டது. 

ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபே மற்றும் கலீல் அகமது ஆகியோரை மட்டுமே அனுப்ப முடியும் என சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கு, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொள்ளாத நிலையில், இறுதியாக டிவோல்ட் பிரேவிஸை மட்டும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் ஒப்புக்கொண்ட நிலையில், பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியது. 

ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம், பௌலரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, இதற்கான பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். 

இந்நிலையில், டிவோல்ட் பிரேவிஸை மும்பை இந்தியன்ஸுக்கு கொடுக்க, மகேந்திரசிங் தோனி விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவை, பணம் கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும் என தோனி அறிவுறுத்தியுள்ளாராம். 

மும்பை இந்தியன்ஸ் மீது இருக்கும் அதிருப்தி காரணமாகமான் ஹர்திக் பாண்டியா வெளியேறுகிறார். ஹர்திக் டிரேடிங்கில் வெளியேற, அதுவும் சிஎஸ்கேவுக்கு வர தான் விரும்புகிறார். குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவுடன் மகேந்திரசிங் தோனி, பேச்சு வார்த்தை நடத்தியதால்தான், ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே வரும் முடிவை எடுத்தாராம். 

இப்படி, சிஎஸ்கேவுக்கு வர ஹர்திக் பாண்டியா விரும்புவதால், அவரை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். மாற்றாக, எதற்காக ஒரு வீரரை தான் இழக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி தெரிவித்துவிட்டாராம். 

இதுகுறித்து சிஎஸ்கே அணி மீட்டிங்கில் பேசிய தோனி, 

‘‘ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே வரத்தான் விருப்பம். அவரை வேறு அணிக்கு டிரேடிங் செய்யவும் முடியாது. அதற்கு, ஹர்திக்கும் ஒப்புக்கொள்ள மாட்டார். இதனால், ஹர்திக்கை சிஎஸ்கே அனுப்புவதுதான், மும்பை இந்தியன்ஸுக்கு இருக்கும் ஒரே வழி. இதனால், அவரை பணம் கொடுத்துதான் வாங்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை, ஹர்திக் ஏலத்திற்கு வந்தாலும் பிரச்சினை இல்லை. கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகிய இரண்டு வீரர்களை விடுவித்து, ஹர்திக்கை வாங்க முடியும்’’ என தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸிடம் பேசிய சிஎஸ்கே நிர்வாகம், ஹர்திக்கை 18 கோடி கொடுத்து, டிரேடிங்கில் வாங்க தயார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளதாம். 

இதனால், தற்போது மும்பை இந்தியன்ஸுக்கு இது, பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஹர்திக் பாண்டியா, வேறு அணிக்கு டிரேடிங்கில் செல்ல சம்மதிக்க மாட்டார். மேலும், அவரை ஏலத்திற்கு அனுப்பினாலும், அவரை சிஎஸ்கேவால் அதிக தொகை கொடுத்து வாங்கவும் முடியும். இதனால், சிஎஸ்கேவுக்கு டிரேடிங்கில் அனுப்புவதும் ஒன்று, ஏலத்திற்கு அனுப்புவதும் ஒன்று என்ற நிலைமையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது. 

இருப்பினும், சிஎஸ்கேவுடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தி, டிவோல்ட் பிரேவிஸை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது. மேலும், கடைசி நேரத்தில், டிரேடிங் டீலில் தோனி ஏற்படுத்திய தடங்கல் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், தோனி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். விரைவில், மும்பை இந்தியன்ஸும் தனது நிலைபாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278