Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Jul 9, 2026 - 04:30 PM

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
Mobitel Inner 1278

யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 

அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

 

குறித்த நபர் இன்றைய தினம் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை ஏனைய மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

 

உடனடியாக இது குறித்து அவரது உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278