Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
காலை உடற்பயிற்சியா? மாலை உடற்பயிற்சியா?

Sep 17, 2026 - 04:36 PM

காலை உடற்பயிற்சியா? மாலை உடற்பயிற்சியா?
Mobitel Inner 1278

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி ஆகியவை முக்கியம். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும். 

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். மேலும், மன அழுத்தத்தைக் குறைத்து, நாளை உற்சாகமாகத் தொடங்க உதவுகிறது. 

காலை உடற்பயிற்சி செய்வதால் வளர்சிதை மாற்றம் மேம்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், உடற்பயிற்சி செய்யும் நேரத்தைவிட தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே முக்கியம். 

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிலருக்கு இரவில் நன்றாகத் தூங்க உதவக்கூடும். உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் சுறுசுறுப்பு நாள் முழுவதும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. 

மாலை நேரத்தில் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், தசைகளின் செயல்திறன் மேம்படக்கூடும். இதனால் வலிமைப் பயிற்சி, எடைப் பயிற்சி போன்றவற்றைச் செய்ய சிலருக்கு ஏற்ற நேரமாக இருக்கலாம். 

மாலை நேரத்தில் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், உடற்பயிற்சி செய்யும் நேரம் ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் வசதியைப் பொறுத்து மாறுபடும். 

காலை அல்லது மாலை என எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். உங்கள் தினசரி அட்டவணை, உடற்பயிற்சியின் நோக்கம் மற்றும் உடல் நிலைக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்வது நல்லது. 

உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைப்பது கடினமாகலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278