Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
வெலிக்கடைக்கு நிகரான கொடூரம்: நீர்கொழும்பு சிறையில் நடந்ததென்ன?

Jul 6, 2026 - 05:28 PM

வெலிக்கடைக்கு நிகரான கொடூரம்: நீர்கொழும்பு சிறையில் நடந்ததென்ன?
Mobitel Inner 1278

சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் மோதல்கள் நமது நாட்டில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்களாக இருந்தாலும், மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட சிறைச்சாலை மோதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டிலேயே பதிவானது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2012 நவம்பர் 09 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 27 கைதிகள் உயிரிழந்தனர். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே நேற்று (05) பிற்பகல் 1 மணியளவில் மோதல் ஏற்பட்டது. விளக்கமறியலில் உள்ள கைதிகள் மற்றும் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகிய இரு தரப்பினருக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று இரவு இடம்பெற்ற இந்த மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து இன்று காலை சிறைச்சாலையின் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இன்று (06) மீண்டும் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இன்று காலை தீவிரமடைந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், இந்த மோதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு விரைவாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இன்று காலை கைதிகளுக்கு உணவு வழங்கும் போது மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார். அதிகாரிகள் பிரதான நுழைவாயிலை நோக்கி ஓடியபோது, கைதிகள் அவர்களைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். கைதிகள் சிறைச்சாலையின் பிரதான கதவை உடைக்க முயற்சி செய்ததாகவும், அந்த வேளையில் அதிகாரிகள் குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த மோதல், 'பூரு மூணா' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான 'சுரேஷ்' என்பவரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் கொடுத்ததாலேயே இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்கு அழைக்கப்பட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலை, குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் சந்தேக நபர்கள் என இரு தரப்பினரும் தடுத்து வைக்கப்படும் இடமாகும். அங்கு சுமார் 1,800 கைதிகள் உள்ளனர்.


சிறைச்சாலைக்குள் இருந்த இரண்டு எதிர்ப்புக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போது, விசேட அறைகளின் பூட்டுகளை உடைத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புக் கைதிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், போதைக்காக சிறைச்சாலை மருந்தகத்தை உடைத்து, அங்குள்ள வலி நிவாரணிகளை அதிகளவில் அருந்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மோதலில் ஈடுபட்ட தரப்பினருக்கு ஆதரவாகவே அவர்கள் போராடியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதற்கிடையில், கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, சிறைச்சாலைக்கு முன்னால் வந்த கைதிகளின் உறவினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன், காயமடைந்த கைதிகளின் உடல்நலனைப் பார்க்கச் சில உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். பின்னர் நிலைமையைச் சீர் செய்ய பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலைக்குள் பிரவேசித்தனர். சிறைச்சாலைக்குள் நிலவும் சூழலைக் கண்காணிக்க விமானப்படையின் ட்ரோன் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

வெலிக்கடை மோதல்:


2012 நவம்பர் 9 அன்று, சிறை அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருட்களைத் தேடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளே சென்றபோது வெலிக்கடை சிறைச்சாலையில் மோதல் வெடித்தது. இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் இது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவமாகக் கருதப்படுகிறது. இந்த மோதலில் 27 கைதிகள் உயிரிழந்தனர். இது ஒரு படுகொலை எனக் கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லகாமஹேவாவிற்கு 2022 ஜனவரியில் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278