Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
லோகேஷ் கனகராஜின் 'DC' படம் குறித்து வெளியான புது அப்டேட்!

Jun 24, 2026 - 03:26 PM

லோகேஷ் கனகராஜின் 'DC' படம் குறித்து வெளியான புது அப்டேட்!
Mobitel Inner 1278

பிரபல முன்னணி திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படம், வரும் ஜூலை 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'கைதி', 'விக்ரம்', 'லியோ' போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் 'தேவதாஸ்' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகராக களம் இறங்குகிறார். 

அவருக்கு ஜோடியாக 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். 

'ராக்கி', 'கேப்டன் மில்லர்' படங்களின் மூலம் ராவான ஆக்ஷன் பாணியை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜிற்கு பிடித்த இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்துள்ளது. 

DC படத்தின் டிரெய்லர் அதிகாரபூர்வமாக மே 17 ஆம் திகதி புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. 

இந்த படத்தில் தேவதாஸ் மற்றும் சந்திரா ஆகிய இருவருக்குள் நடக்கும் தீவிரமான காதல் மற்றும் அதீத வன்முறை நிறைந்த உலகத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு கிரைம் திரில்லர் படமாக இருந்து வருகிறது. 

மேலும், 'இந்த திரைப்படம் தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, ஆனால் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை மீண்டும் இயக்குநராகவே திரும்பவுள்ளேன்' என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். 

இந்த 'DC' திரைப்படம் 2026 ஜூலை 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278