Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
மத்திய வங்கியின் முடிவால் அதிருப்தியில் COPF!

Jun 17, 2026 - 01:43 PM

மத்திய வங்கியின் முடிவால் அதிருப்தியில் COPF!
Mobitel Inner 1278

ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம் குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதன்போது மத்திய வங்கி அதிகாரிகள் குறிப்பிடுகையில், நாணய மாற்று வீதம் மற்றும் வெளிநாட்டு நாணய சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, அதேபோல் வெளிநாட்டு நாணய திரவத்தன்மை பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.


இந்தத் தீர்மானமானது, நாணய மாற்று வீதத்தின் ஸ்திரமற்ற தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், வெளிநாட்டு நாணய விநியோகத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு குறுகிய கால கொள்கை நடவடிக்கை என்றும், சந்தை நிலவரங்கள் வழமைக்குத் திரும்பியவுடன் அது தளர்த்தப்படும் என்றும் மத்திய வங்கி அதிகாரிகள் மேலும் கூறினர்.


இருப்பினும், இந்த நடவடிக்கையின் காரணமாக சந்தை மீதான நம்பிக்கை குறைவடைவதற்கும், வெளிநாட்டு நாணய சந்தையில் ஸ்திரமற்ற தன்மை அதிகரிப்பதற்குமான அபாயம் ஏற்படக்கூடும் என அரசாங்க நிதி பற்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2492/10 வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஏற்றுமதி வருவாயை இலங்கைக்குக் கொண்டுவருதல் பற்றிய விதிகள்” உடன்படிக்கைக்கும் இக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


புதிய விதிகளின்படி, எந்தவொரு மாதத்திலும் ஏற்றுமதி வருவாயை இலங்கைக்குக் கொண்டுவரும் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், அந்தப் பணத்தை அனுமதிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


எஞ்சிய தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அன்றைய தினத்திற்குள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும்.


இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை எனக் குறைக்கப்பட்டுள்ளது.
 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278