Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஐட்டம் பாட்டு பிடிக்கலைனா அவங்க தான் ஐட்டம்!

Jun 17, 2026 - 01:27 PM

ஐட்டம் பாட்டு பிடிக்கலைனா அவங்க தான் ஐட்டம்!
Mobitel Inner 1278

பெத்தி படத்தில் வந்த குத்துப்பாடலை எழுதிய அனந்த ஸ்ரீராம் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.

 

ஹல்லல்லோ பாடலை எழுதிய ஸ்ரீராமோ ஐட்டம் பாட்டு பிடிக்காதவர்களை ஐட்டம் என கூறியிருக்கிறார். 

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி படம் ஜூன் 4 ஆம் திகதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதிலும் குறிப்பாக ஹீரோயின் ஜான்வி கபூரின் கதாபாத்திரத்தை சித்தரித்த விதத்தை ரசிகர்கள் விளாசினார்கள். ஹீரோயின் என்றால் அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துவதா என்று கேட்டார்கள். 

ஜான்வி கபூர் முகத்தை காட்டாமல் அவரின் கழுத்திற்கு கீழ் மட்டுமே காட்டியிருக்கிறார்கள். பெண் என்றால் அவ்வளவு குறைவாக போய்விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து நான் ஒன்றும் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் இயக்குநர் புச்சிபாபு சனா. 

பெத்தி படத்தில் ஸ்ருதி ஹாசன், ராம் சரண், ஜான்வி கபூர் சேர்ந்து டான்ஸ் ஆடிய ஹல்லல்லோ குத்துப்பாட்டு குறித்தும் விமர்சிக்கப்பட்டது. 

ஐட்டம் டான்ஸ் இல்லாமல் படம் வராதா?. ஹீரோவும், ஹீரோயினும், ஸ்ருதியும் டான்ஸ் ஆடுவதை பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. 

விண்வெளி நாயகன் கமல் ஹாசன் மகளும், நடிப்புக்கு பெயர் போன மறைந்த ஸ்ரீதேவியின் மகளும் இப்படி ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவுக்கு வந்துவிட்டார்களே என பலரும் தெரிவித்தார்கள். 

அந்த பாட்டுக்கு என்ன குறைச்சல் நன்றாக தானே இருந்தது. சும்மா குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல வேண்டாம் என்று ஹல்லல்லோ ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பெத்தி பட சக்சஸ் மீட் ஜூன் 14 ஆம் திகதி ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அனந்த ஸ்ரீராமிடம் ஹல்லல்லோ விமர்சனம், சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. மேலும் ஹீரோயினை திரையில் காட்டிய விதம் பற்றிய சர்ச்சை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு ஸ்ரீராம் கூறியதாவது, ஐட்டம் பாடல்களை அப்படியே ஏற்றுக் கொண்டு ரசிப்பவர்கள் என் பாடல் ஸ்பெஷல் விருந்து ஆகும். அதே சமயம் ஐட்டம் பாடல்களை விரும்பாதவர்களுக்கு, அவர்கள் தான் ஐட்டம்கள் என்றார். அவர் மேலும் கூறியதாவது, புகார் தெரிவித்தால் தெளிவாக தெரிவிக்க வேண்டும். சும்மா உணர்ச்சிவசப்பட்டோ, மனதில் ஒன்றை வைத்துக் கொண்டோ பேசுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என்றார். 

ஹீரோயினை உடம்பையேவா காட்டுவீர்கள். அவருக்கு ஒரு முகம் இருப்பதையே மறந்துவிட்டார் இயக்குநர். ஜான்வி கபூரை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தியிருக்கிறார் புச்சிபாபு சனா என்று புகார் எழுந்தது. அது குறித்து ஸ்ரீராம் தெரிவித்ததாவது, 

ஒரு கதாபாத்திரம் அப்படி இருக்கிறது என்றால் அது இயக்குநரின் கற்பனையில் அவ்வாறு உருவாகியிருக்கிறது. எந்தவித குறுக்கீடும் இல்லாமல் தங்கள் கற்பனையை வெளிப்படுத்த இயக்குநர்களை அனுமதிக்க வேண்டும். ஒரு கதாபாத்திரத்தை தான் கற்பனை செய்ததுபடி உருவாக்கக் கூட இயக்குநருக்கு சுதந்திரம் இல்லை என்றால் கற்பனைத்திறன் என்னவாகும் என்றார். 

பாடல் மற்றும் ஜான்வி கபூர் கதாபாத்திரம் குறித்து ஸ்ரீராம் பேசியதை கேட்டவர்கள் அவரை விளாசுகிறார்கள்.என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறுகிறார் ஸ்ரீராம் என்று திட்டுகிறார்கள். 

இதற்கிடையே ராம் சரணுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது எளிது இல்லை என கூறியிருக்கிறார் ஜான்வி கபூர். உங்கள் டயட் ரகசியம் சொல்லுங்கள் என்று கேட்டபோது, ராம் சரணுடன் சேர்ந்து ஒரேயொரு நாள் டான்ஸ் ஆடுங்கள், எடை தானாக குறையும் என்றார். அதன் பிறகு மார்பு, இடுப்பு பகுதியை குறி வைக்கும் ஷாட்ஸ் வேண்டாம் என புச்சிபாபுவிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை என ரசிகர் ஒருவருக்கு ஜான்வி மெசேஜ் அனுப்பியது கசிந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278