Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
விமானப்படை அதிகாரி மனைவி பாலியல் வன்கொடுமை!

Jun 16, 2026 - 12:43 PM

விமானப்படை அதிகாரி மனைவி பாலியல் வன்கொடுமை!
Mobitel Inner 1278

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பணம் பறிக்கப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

24 வயதான பாதிக்கப்பட்ட பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் வேறு நகரத்தில் விமானப்படை அதிகாரியாக பணியிலுள்ளார். 

நடந்ததை தாமதமாக அறிந்து பெண்ணின் கணவர் கடந்த 14 ஆம் திகதி புகார் அளித்ததை அடுத்து அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கடந்த 2025 பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து அவரது பாடசாலை நண்பன் அய்யாஸ் தாஜ் மதாரே என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்துள்ளார். 

பிப்ரவரி 8 ஆம் திகதி ஒரு ஓட்டலில் நடந்த சந்திப்பின் போது, அய்யாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துள்ளார். 

பெண் மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்துள்ளார். 

அந்த காட்சிகளை அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி கடந்த சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா வரை பறித்துள்ளார். 

இதில் தனது நண்பர்களையும் அய்யாஸ் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டார். அவருக்கு செய்வினை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். 

கடந்த மே 31 ஆம் திகதி அய்யாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர். 

அங்கு ஹஸ்ரத் மௌலானா என்ற மதப் பெரியவர் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகளைச் செய்துள்ளனர். 

பின்னர், மிரட்டி அய்யாஸுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதன்மைக் குற்றவாளி அய்யாஸ் தாஜ் மதாரே மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோதமாக இந்த திருமணம் நடத்தி வைத்த மௌலானாவைதேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

பெண் கட்டபயப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் நாக்பூரில் கொந்தளிப்பான சூழலும் நிலவி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278