Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நாட்டில் TIN இலக்கத்தை பெறாமல் இருக்கும் 4 மில்லியன் பேர்!

Jun 14, 2026 - 07:02 PM

நாட்டில் TIN இலக்கத்தை பெறாமல்  இருக்கும் 4 மில்லியன் பேர்!
Mobitel Inner 1278

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  

18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய நாட்டில் சுமார் 17 மில்லியன் மக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது பல்வேறு தேவைகளுக்காக TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வணிகங்களை பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் குறிப்பிடுகையில், உரிய சட்டத்திற்கு அமைய TIN இலக்கமானது இனிமேலும் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278