Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பாரதிராஜா குழந்தை மாதிரி - ரஜினி

Jun 10, 2026 - 04:27 PM

பாரதிராஜா குழந்தை மாதிரி - ரஜினி
Mobitel Inner 1278

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தமது 84 வது வயதில் காலமானார். 

அன்னாரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பாரதிராஜா "16 வயதினேலே" படத்தின் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 

முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருபெரும் நடிகர்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுத்து ஆச்சரியப்பட வைத்தார். 

அதன்பிறகு கமலை வைத்து "சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி" படங்களும், ரஜினியை வைத்து "கொடி பறக்குது" படமும் இயக்கினார். 

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, 

அவரின் திறமை சாதனை பற்றி எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையில் நிறைய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து நிறைய அறிமுகப்படுத்தியவர் திரையுலகை வாழ வைத்தவர். 

இயக்குனர் தயாரிப்பாளர் என யாருக்கு பிரச்னை வந்தாலும் முதலில் குரல் கொடுத்து போராடியவர். 

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் பெயரை மறக்க மாட்டார்கள் என்றென்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கும். 

தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. பிடித்தால் பிடித்திருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று மனதில் இருப்பதை சொல்பவர். 

உன்னை எனக்குப் பிடிக்கும் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னை பற்றி விமர்சனம் செய்வார். 

அவரிடம் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போன்று வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி என எல்லோருக்கும் நட்புடன் இருந்தவர் அன்போடு இருந்தவர். 

அவர் குணமாகி விடுவார் என்று தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள். அவர் என்றென்றும் நினைவில் உடன் இருப்பார். 

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278