Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
அணி தலைவரிலிருந்து நீக்கப்படும் சூர்யகுமார் யாதவ்!

Jun 5, 2026 - 11:20 AM

அணி தலைவரிலிருந்து நீக்கப்படும் சூர்யகுமார் யாதவ்!
Mobitel Inner 1278

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய அணி தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேநேரத்தில், இந்த ரேஸில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் போட்டியில் இருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இந்திய டி20 அணியின் புதிய அணி தலைவராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். 2024 ஆம் ஆண்டு டி20 அணி தலைவராக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பெரும் வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண மற்றும் 2026 டி20 உலகக் கிண்ண ஆகியவற்றைப் பெற்றுத் தந்தார். 

ஆயினும் இந்த வெற்றிகளுக்கு மத்தியில் அவரது துடுப்பாட்டம் குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். 

இந்த நிலையில்தான், அவரது ஃபார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. 

அதேநேரத்தில், அவருக்குப் பதிலாக புதிய அணி தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரேஸில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் போட்டியில் இருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றம், இந்த மாத இறுதியில் அயர்லாந்து அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், ஸ்ரேயாஸை நீண்டநாட்களாக இந்தப் பொறுப்பிற்கு ஆதரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் அணி தலைவர் பொறுப்பை ஏற்கும்பட்சத்தில், திலக் மற்றும் இஷான் ஆகியோரில் ஒருவர் இந்தியாவின் துணை அணி தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதுதொடரபான எந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வராத நிலையில், டி20 அணி தலைவர் நியமனம் தொடர்பாக தேர்வுக் குழு, பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம், பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278