Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
பிளேடியத்தில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற தொடருடன் CDB PPL 2026 வெற்றிகரமாக நிறைவு

Jun 4, 2026 - 09:49 AM

பிளேடியத்தில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற தொடருடன் CDB PPL 2026 வெற்றிகரமாக நிறைவு
Mobitel Inner 1278

இலங்கையின் முதன்மையான வணிக Bowling தொடரான 'CDB Playdium Pin League' (CDB PPL 2026), கடந்த மே 16, மே 23 ஆகிய திகதிகளில் கொழும்பு One Galle Face இல் உள்ள பிளேடியத்தில் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் பின்னர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

வணிக அணிகள், Bowling ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறை பங்காளர்களை ஒன்றிணைத்த இந்தத் தொடரானது, விளையாட்டுத்திறன், குழுப்பணி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு விறுவிறுப்பான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்கியது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள், இறுதிப் போட்டியில் தங்களது இடங்களைப் பிடிப்பதற்காக தீவிரமான சுற்றுகளில் போட்டியிட்டதுடன், இது பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 

இம்முறை போட்டிகளில் 43 அணிகள் பங்கேற்றதுடன், இது தற்போது வரை நடைபெற்ற தொடர்களில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொடர்களில் ஒன்றாக அமைந்தது. PPL ஆனது வருடாந்தம் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது நாட்டில் நடத்தப்படும் மிகப்பெரிய Bowling தொடராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தொடரானது இலங்கையில் ஒரு போட்டித் தன்மைமிக்க விளையாட்டாகவும், வணிக பொழுதுபோக்கு செயற்பாடாகவும் Bowling பெற்று வருகின்ற வளர்ந்து வரும் பிரபலத்தை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது. 

விறுவிறுப்பான இறுதிப் போட்டிக்குப் பின்னர், தொடர் முழுவதும் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய 'Panther Pacers' அணி CDB PPL 2026 இன் சம்பியனாக தெரிவானது. 'Sports Nutrition Hub' அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் 'Globe Glass Fireball' அணி மூன்றாவது இடத்திற்கான பட்டத்தை தன்வசப்படுத்தியது. 

இந்நிகழ்வின் போது தனிநபர்களின் திறமைகளும் கௌரவிக்கப்பட்டன. தனது சிறப்பான மற்றும் நிலையான புள்ளி சேகரிப்பிற்காக மொஹமட் அஸாருதீன் சிறந்த வீரரராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் போது தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்திய வேர்ஜீனியா எச். பெரேரா சிறந்த வீராங்கனையாக தெரிவானார். 

இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, Bowling ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக உறுப்பினர் திட்டமான 'PPL Bowling Membership' அறிமுகப்படுத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இந்த அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கும், வளர்ந்து வரும் PPL Bowling சமூகத்தின் ஒரு அங்கமாக மாறுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டமானது, நாட்டில் ஒரு வலுவான Bowling கலாசாரத்தை உருவாக்கும் அதே வேளையில், உறுப்பினர்களுக்கு வருடம் முழுவதும் பிரத்தியேக நன்மைகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்தொடரின் வெற்றி குறித்து பிளேடியம் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இந்நிகழ்வை மாற்றுவதற்கு பங்களித்த அனைத்து பங்கேற்பு அணிகள், அனுசரணையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், போட்டி முழுவதும் ஒவ்வொரு அணியும் வெளிப்படுத்திய ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சாதகமான ஆற்றலையும் அமைப்பாளர்கள் வரவேற்றனர். 

CDB PPL 2026 தொடரானது அனுசரணையாளர்கள் மற்றும் பங்காளர்களின் வலுவான ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் PLC (CDB) பிரதான அனுசரணையாளராக இணைந்ததுடன், ATOM நிறுவனம் தொழில்நுட்ப பங்காளராக ஆதரவளித்தது. Oceans Talent உத்தியோகபூர்வ திறமையாளர் பங்காளராகவும், PickMe for Business வணிகத் தள பங்காளராகவும் இணைந்து கொண்டன. One Galle Face மூலோபாய பங்காளராகவும், Kobra சக்தி பங்காளராகவும் இத்தொடருக்கு ஆதரவளித்தன. 

மேலும், டிஜிட்டல் உள்ளடக்கப் பங்காளராக hype.Productions, உத்தியோகபூர்வ மக்கள் தொடர்புப் பங்காளராக PR Wire, நேரடி ஒளிபரப்புப் பங்காளராக The Papare, பரிசுப் பங்காளராக Pearl Bay Leisure Park மற்றும் சூடான பான பங்காளராக Anchor Hot Chocolate ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒட்டுமொத்த தொடரின் அனுபவத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. 

இலங்கையில் ஈர்ப்புமிக்க Bowling சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பொழுதுபோக்கு விளையாட்டு அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் பிளேடியம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தத் தொடர் மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது. CDB PPL 2026 தொடருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிளேடியம் எதிர்காலத்தில் மேலும் பல பாரிய மற்றும் உற்சாகமான Bowling நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278