Oct 26, 2026 - 07:21 PM

SLIIT Kandy UNI, வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக அமைப்புகள் குறித்த தனது முதலாவது DTecBiz 2026 கருத்தரங்கை 2026 ஜூலை 7 அன்று நடத்தியது. “அறிவு உருவாக்கத்திலிருந்து சமூகத் தாக்கம் வரை: புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான பாதைகள்" (From Knowledge Creation to Societal Impact: Pathways for Innovation, Growth, and Well-being) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்தனர். புத்தாக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய மேம்பாட்டை ஊக்குவிக்கும் நடைமுறைத் தீர்வுகளை நோக்கிய ஆய்வுகள் இதில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
SLIIT Kandy UNI வளாகத்தின் வணிகத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எமில் குமார அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், 200-க்கும் மேற்பட்ட எழுத்தாசிரியர்கள் பங்கேற்றனர். 10 விசேட தலைப்புகளின் கீழ் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஸ்மார்ட் கல்வி, டிஜிட்டல் சுகாதாரம், நிலையான உட்கட்டமைப்பு, ஸ்மார்ட் நகரங்கள், வணிக பகுப்பாய்வு, நிறுவன புத்தாக்கம், நிதித் தொழில்நுட்பங்கள், நிர்வாகம், நிறுவன நடத்தை மற்றும் நிலைபேற்றியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் கணினிப் பொறியியல் திணைக்களத்தைச் சேர்ந்தவரும், இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (Lanka Education and Research Network - LEARN) தலைமை நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் ரொஷான் ராகேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்வி, வணிகம், சுகாதாரம், பொறியியல், நிர்வாகம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மாற்றியமைக்கும் தாக்கத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், பொறுப்பான, அறநெறி சார்ந்த மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட அதன் பயன்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
புத்தாக்கத்திற்கான ஒரு வினையூக்கியாக செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்களையும் மாணவர்களையும் அவர் ஊக்குவித்தார். மேலும், பல்துறை ஒத்துழைப்பு, தொடர்ச்சியான கற்றல் மற்றும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கான ஆராய்ச்சி சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தக் கருத்தரங்கில், ஆராய்ச்சியின் தரம், புத்தாக்கம் மற்றும் அறிவார்ந்த தகவல் தொடர்பில் உள்ள சிறப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், பத்து பிரிவுகளில் ஒவ்வொன்றிலிருந்தும் சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த ஆக்க வழங்குநர் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கவும், ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களைப் பெறவும், தொழில்முறை வலையமைப்புகளை விரிவுபடுத்தவும், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்தவும் வாய்ப்புகளைப் பெற்றனர்.
MELWA Steel (Pvt) Ltd, ஹட்டன் நஷனல் வங்கி, ஸ்ரீலங்கா-டெலிகொம் மொபிடெல், டயலொக் ஆசியாட்டா பிஎல்சி, Forever Skin Naturals (Pvt) Ltd., The Chartered Institute of Management Accountants (CIMA) Sri Lanka, மற்றும் இலங்கை வங்கி ஆகிய நிறுவனங்களின் ஆதரவிற்கு SLIIT Kandy UNI தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், கல்வித் தரத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றிய கருத்தரங்கத் தலைவர் மற்றும் இணைத் தலைவர், கருத்தரங்கச் செயலாளர், ஏற்பாட்டுக் குழு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதிப்பாய்வாளர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கிறது. குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்கு, அதிலும் குறிப்பாக அதன் தலைமை கல்வி அதிகாரி மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆகிய பொறுப்புகளை வகிக்கும் கலாநிதி மாதவ ஹேரத் அவர்களுக்கு, அவரது தலைமைத்துவத்திற்கும் ஆதரவிற்கும் விசேட பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
SLIIT Kandy UNI பல்கலைக்கழகத்தின் முதன்மையான ஆராய்ச்சி மன்றமான DTecBiz 2026, ஆராய்ச்சிச் சிறப்பிற்கான ஒரு நீடித்த பாரம்பரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கை ஒரு அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடாக உருவெடுப்பதற்கும் பங்களிப்பாற்றுகிறது.

































