Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
நாட்டின் பல்வேறு இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

Oct 4, 2026 - 11:01 AM

நாட்டின் பல்வேறு இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு
Mobitel Inner 1278

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹபரணையில் இருந்து கந்தளாய் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் அதன் பின்புறம் பயணித்த நபரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபராவார். 

அத்துடன் அம்பாறை, தர்மபால மாவத்தையில் கல்முனை திசை நோக்கிச் சென்ற வேன் ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதனிடையே களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

ஹொரணை திசையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றுடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த பெண்ணும் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் 16 வயதுடைய யுவதியும் ஆவர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278