Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
எவன்கார்ட் நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்து ஆராய கோப் குழு தீர்மானம்

Sep 27, 2026 - 07:59 AM

எவன்கார்ட் நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்து ஆராய கோப் குழு தீர்மானம்
Mobitel Inner 1278

இலங்கை கடற்படையுடன் இணைந்து ரக்னா அரக்ஷக பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் நிறுவனத்தைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோப் குழு (பொது நிறுவனங்கள் பற்றிய குழு) தெரிவித்துள்ளது. 

குறித்த கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எவன்கார்ட் தனியார் நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமையினால் அரசாங்கத்திற்கு பெருந்தொகை பணம் இழக்கப்பட்டுள்ளதாகக் கோப் குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

ரக்னா லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் அண்மையில் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு இந்த கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எவன்கார்ட் நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் கேள்வியெழுப்பியிருந்தார். 

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எவன்கார்ட் நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் எந்தத் தரப்பின் தேவையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து இதன்போது கோப் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கேள்வியெழுப்பியிருந்தார். 

இதற்கமைய, இந்த நிறுவனம் தொடர்பில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதற்கும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278