Sep 27, 2026 - 06:46 AM

வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையிலேயே கடற்படையினர் இந்தப் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பிரிவுகளும் இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்து இன்று இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.































