Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

Sep 26, 2026 - 11:47 PM

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்
Mobitel Inner 1278

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதன்போது, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் உள்ளிட்ட 15 கடற்றொழில் மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 15 மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது. 

குறித்த குழுக்களின் இணைத் தலைவர்களாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் ஆகியோர் செயற்படவுள்ளனர். 

மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படும் இக்குழுவில் மாவட்டச் செயலாளர், மாவட்ட உதவிக் கடற்றொழில் பணிப்பாளர், கடற்றொழில் அமைச்சரால் நியமிக்கப்படும் கடற்றொழில் ஒருங்கிணைப்பு அலுவலர், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், இலங்கை பொலிஸ், இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவுள்ளனர். 

தேவைக்கேற்ப, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளையும் இக்குழுக்களுடன் இணைத்துக்கொள்வதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் மீன்பிடி வளக் கொள்ளையைத் தடுப்பது, அத்துடன் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பதே இக்குழுக்களின் முக்கிய நோக்கமாகும். 

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், ஸ்டெபனி பெர்னாண்டோ, அபூபக்கர் ஆதம்பாவா, கருணாநாதன் இளங்குமரன் மற்றும் திலகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

மேலும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278