Sep 17, 2026 - 05:31 PM

புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ். மாநகர சபை கட்டிடத்தை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பார்வையிட்டார்.
யாழிற்கு நேற்று (17) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நகர அபிவிருத்தி திணைளத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர், புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபை கட்டிடத்தை பார்வையிட்டதுடன், தேவைகள் மற்றும் குறைபாடுகள், கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை யாழ். தனியார் பேருந்து நிலையம், பண்ணையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா, மற்றும் புல்லுக்குளம் பகுதிகளையும் பார்வையிட்டதுடன், தனியார் பேருந்து நிலையத்தில் மேற் தளத்தில் உள்ள கடைத்தொகுதிகளை குத்தகைக்குவிடப்படாமை மற்றும் பராமரிப்புக்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.





























