Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
$1 பில்லியன் பணத்தை வௌியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை

Sep 17, 2026 - 09:27 PM

$1 பில்லியன் பணத்தை வௌியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை
Mobitel Inner 1278

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தனியார் வங்கி அதிகாரிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதன்படி ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனினும், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். 

மேலும், குறித்த வங்கி அதிகாரிகள் அவர்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடை செய்து மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் ஜிப்ரி என்ற வர்த்தகரின் பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் மற்றொரு சந்தேகநபரை வரும் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278