Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி காரைநகரில் போராட்டம் வெடித்தது!

Sep 17, 2026 - 12:48 PM

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி காரைநகரில் போராட்டம் வெடித்தது!
Mobitel Inner 1278

தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்று (17) காரைநகர் - ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திணைக்கள அதிகாரிகள் உள்ளே சென்றனர். 

அதனை தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா, பிரதேச செயலர் உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகள் சிலர் போராட்ட இடத்திற்கு வருகை தந்தனர். 

இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில், 

அபிவிருத்தி பணிகளில் தொடர்ச்சியாக எங்களை புறக்கணித்து வருகின்றனர். நடமாட்டம் குறைந்த காட்டு பகுதிகளில் உள்ள வீதிகளை காப்பெட் வீதிகளாக புனரமைக்கின்றனர். ஆனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதிகளை புனரமைப்பு செய்யவில்லை. 

குடிநீர் வழங்கல் சீராக இடம்பெறவில்லை. எமது பகுதிக்கான குழாய்வழி மூலமான குடிநீர் திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஒவ்வொரு தடவை கேட்டாலும் அதற்கு ஏதாவது சாட்டு கூறுகின்றனர். 

ஊரி பிரதான வீதியில் குடிநீர் வழங்கல் குழாய்களை புதைப்பதற்கான வரைபடத்தினை காண்பிக்கின்றனர். ஊரியில் எத்தனை கிராமங்கள் உள்ளன? அவற்றை எல்லாம் வரைபடத்தில் உள்ளடக்கவில்லை. கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. 

அரசியல் பழிவாங்கல் செய்கின்றார்கள். எங்களை எதற்காக புறக்கணிக்கின்றீர்கள்? எமது பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வையுங்கள் என்றனர். 

அதற்கு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதிலளிக்க முற்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிலையில் மூன்றுபேரை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளே சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278