Sep 17, 2026 - 09:54 AM

தமிழ் சினமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், சினிமா தாண்டி கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
அதன்படி இந்த ஆவணப்படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற இருக்கிறதாம். சமீபத்தில் லண்டனில் அஜித் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் மிச் செலின் லீ மேன்ச் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். கார் பந்தயத்துக்கு பிறகு அஜித்துடன் விஜய் ரேஸ் கார் ஓட்டி மகிழ்ந்தார்.
இது தொடர்பான காட்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இது இருதரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியைடைய செய்திருக்கிறது.





























