Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை!

Aug 24, 2026 - 04:17 PM

கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை!
Mobitel Inner 1278

தன்னை எதிர்த்து விளையாடிய வீரரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி குத்துச்சண்டையில் கின்னஸ் சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர் ஜொலானி டெட்டே. 38 வயதான இவர் 2007 - 2008 ஆம் ஆண்டில் உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும், 2017 மற்றும் 2019 இல் உலக குத்துச்சண்டை அமைப்பின் சார்பில் நடந்த போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டம் வென்று மிரட்டினார். 

இந்நிலையில், எம்தான்சேனே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய டெட்டேவை முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகத் தெரிகிறது. 

இதில், டெட்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் இருந்த 27 வயது இளம்பெண் படுகாயமடைந்தார். 2017 ஆம் ஆண்டில் தன்னை எதிர்த்து விளையாடிய சிபோனிசோ கொன்யா என்பவரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்த டெட்டேவின் மரணம் குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278