Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் மிகப்பெரிய பால் பண்ணை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி, ESG தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய சந்தைத் தயார்நிலையை மேம்படுத்தும் ப

Jun 9, 2026 - 03:17 PM

இலங்கையின் மிகப்பெரிய பால் பண்ணை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி, ESG தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய சந்தைத் தயார்நிலையை மேம்படுத்தும் ப
Mobitel Inner 1278

Pelwatte Dairy Industries Limited நிறுவனம், சூழல் முகாமைத்துவம், ESG இணக்கப்பாடு மற்றும் பொறுப்பான பால் பதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புத்தளவிலுள்ள தனது தொழிற்சாலையில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Effluent Treatment Plant - ETP) வெற்றிகரமாக நிறுவியுள்ளது. 

இந்த வசதியானது இலங்கையின் பால் பதப்படுத்தும் செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும். இது தனது செயற்பாடுகளை உலகளாவிய சூழல் தரநிலைகளுடன் ஒத்திசைந்து செல்வதற்கும் சர்வதேச சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கும் பெல்வத்த டைரி நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. 

ESG மற்றும் பொறுப்பான வளர்ச்சிக்கான மூலோபாய அர்ப்பணிப்பு 

இந்த முதலீடானது, சூழல், சமூகம், ஆளுகை (ESG) கொள்கைகளை முதன்மைச் செயற்பாடுகளில் உள்வாங்குவதற்காக, நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான மற்றும் தொலைநோக்கு ரீதியான உத்தியை பிரதிபலிக்கிறது. பெல்வத்த டைரி நிறுவனம் தனது பதப்படுத்தும் திறனைத் தொடர்ச்சியாக அதிகரித்து, தனது ஏற்றுமதி தடத்தை விரிவுபடுத்தி வரும் வேளையில், சூழல் இணக்கத்தன்மையை நிலைபேறான வளர்ச்சிக்கான ஒரு முக்கிய தூணாகக் கொண்டு செயற்படுகின்றது. 

சந்தைப் பிரவேசத்திற்கு அவசியமாக விளங்கும் கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகள், சூழல் ரீதியான அறிக்கையிடல் மற்றும் நிலைபேறான தன்மை நடைமுறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள மேற்கத்திய, ஐரோப்பிய மற்றும் தூர கிழக்கு நாடுகளின் சந்தைகளின் கடுமையான சூழல் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ETP வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அளவிடக்கூடிய வளர்ச்சிக்கான எதிர்கால தயார்நிலை 

இந்த வடிவமைப்பானது, நாளாந்தம் 250m³ அடிப்படை சுத்திகரிப்புத் திறனை கொண்டுள்ளதுடன், எதிர்கால உற்பத்தி அளவுகளின் வளர்ச்சியை உள்வாங்குவதற்காக சுமார் 30% மேலதிக திறனுடன், 325m³ வரையிலான உச்ச கொள்ளளவைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த எதிர்காலத் தயார்நிலை வடிவமைப்பானது, அதிக உற்பத்திச் சூழல்களிலும் பெல்வத்த நிறுவனம் சீரான சூழல் செயல்திறனைப் பேணுவதை உறுதி செய்வதுடன், நிறுவனத்தின் நீண்டகால இணக்கம், செயற்பாட்டு நெகிழ்வுத் திறன் மற்றும் பொறுப்பான விரிவாக்கத்திற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. 

உலகளாவிய இணக்கத்தை ஆதரிக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் 

இந்த ETP பின்வரும் மேம்பட்ட சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது: 

Integrated Dissolved Air Flotation (IDAF) அமைப்பு 

காற்றற்ற மற்றும் மேம்படுத்தப்பட்ட தொடர்ச்சியான தொகுதி உலை (AnSBR/eSBR) அமைப்புகள் 

பிரத்தியேக CIP கழிவுநீர் முகாமைத்துவம் 

நிகழ்நேர தன்னியக்க செயன்முறை கண்காணிப்பு 

Screw press சேறு நீக்கும் முறை 

இந்நிலையம் இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) கழிவு வெளியேற்றம் தொடர்பான இறுக்கமான தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துப்போவதுடன், ISO 14001 சூழல் முகாமைத்துவ அமைப்பு (EMS) நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஆதரிக்கிறது. இது சூழல் முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கான பெல்வத்த நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வலுப்படுத்துகிறது. 

ஒழுங்குபடுத்தல் ஈடுபாடு மற்றும் அங்கீகாரம் 

முதலீட்டுச் சபை (BOI) ஆனது, சூழல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களின் விசேட பிரதிநிதிகள் இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். இது இந்த முதலீட்டின் மூலம் எட்டப்பட்ட சூழல் தரநிலைகளுக்கான வலுவான ஒழுங்குமுறை ஈடுபாட்டையும் அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கிறது. அவர்களின் இருப்பானது, தேசிய சூழல் கட்டமைப்புகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் அதேவேளையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்திசைந்து செயற்படுவதில், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் பெல்வத்த நிறுவனத்தின் சிறந்த அணுகுமுறையை எடுத்துக் காட்டுகிறது. 

இலங்கை பால் பண்ணைத் துறையின் உலகளாவிய நம்பகத்தன்மையை மேம்படுத்தல் 

இந்த மேம்படுத்தலின் மூலம், முன்னணி சர்வதேச கொள்வனவாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைப்புகளின் சூழல் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொறுப்பான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த பால் பதப்படுத்துநராக பெல்வத்த நிறுவனம் தனது நிலையை வலுப்படுத்துகிறது. 

இந்த திட்டமானது, நிறுவனத்தின் ESG இணக்க நிலையை மேம்படுத்துவதோடு மாத்திரமன்றி, இலங்கையின் பால் பண்ணைத் துறையின் நிலைபேறான தன்மை தரநிலைகளை உயர்த்துவதற்கும் பங்களிக்கிறது. 

பெல்வத்த நிறுவனம் தமது திட்டக் குழுவினர், செயற்பாட்டு பணியில் உள்ள ஊழியர்கள், ஆலோசகர்கள், ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைகள் மற்றும் கூட்டாளர்கள் ஆகியோர் வழங்கிய பங்களிப்புகளுக்காக தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. தமது பொறியியல் நிபுணத்துவம் மற்றும் வெற்றிகரமான திட்ட வெளியீடு தொடர்பில், Industrial Solutions Lanka (Pvt) Limited நிறுவனத்திற்கு விசேட கௌரவத்தை செலுத்துகிறது. 

Pelwatte Dairy Industries Limited பற்றி 

Pelwatte Dairy Industries Limited ஆனது, இலங்கையின் முன்னணி பால் பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது பால் பண்ணை மதிப்புச் சங்கிலி முழுவதும் புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கு உச்ச செயலூக்கத்தை வழங்கும் அதேவேளையில், உயர்தர தயாரிப்புகளை வழங்க கடமைப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278