Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

Jun 4, 2026 - 12:22 PM

சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!
Mobitel Inner 1278

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

 

சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளின் காரணமாக, உலகத் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர அவரால முடிந்துள்ளது.

 

இதற்கமைய, 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளைப் பெற்று, உலகத் தரவரிசையில் அவர் 5ஆம் இடத்தைப் உறுதி செய்துள்ளார்.

 

கடந்த திங்கட்கிழமை (01) மொரோக்கோவில் நடைபெற்ற 'ரபாத் டைமண்ட் லீக்' (Rabat Diamond League) தொடரில், 85.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். 

 

அவரது இந்தச் சிறப்பான திறமையே உலகத் தரவரிசையில் அவர் முன்னிலைக்கு வரக் காரணமாக அமைந்துள்ளது.

 

ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர்  முதலிடத்தில் உள்ளார்.

 

உலக அளவில் முன்னணியில் உள்ள 5 ஈட்டி எறிதல் வீரர்கள்:

  1. ஜூலியன் வெபர் (Julian Weber) - ஜெர்மனி

  2. ஆண்டர்சன் பீட்டர்ஸ் (Anderson Peters) - கிரெனடா

  3. கெஷோர்ன் வால்காட் (Keshorn Walcott) - டிரினிடாட் மற்றும் டொபாகோ

  4. நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) - இந்தியா

  5. ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) - இலங்கை

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278