Nov 6, 2026 - 04:14 PM

தற்காலத்து நாகரிகம், தனித்துவமான தோற்றம் கொண்ட கட்டடம் மற்றும் பிரபலங்கள் கலந்து சிறப்பிக்கும் தருணம் ஆகியவற்றை ஒன்றாகச் சங்கமிக்கச் செய்யும் வகையில் Sriyani Dress Point தனது மற்றுமொரு பிரமாண்டமான காட்சியறையை கொழும்பு 06, வெள்ளவத்தையில் 2026 நவம்பர் 11ம் திகதி காலை 10 மணியளவில் கோலாகலமாகத் திறந்து வைக்கவுள்ளது. “புட்ட பொம்மா” மற்றும் “மொனிகா மொனிகா” போன்ற பிரபலமான இந்திய சினிமாப் பாடல்களில் தோன்றிப் புகழ்பெற்ற பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் இந்நிகழ்வில் நேரடியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். தலைநகரில் ஆடையணி விற்பனை நிறுவனமொன்று இந்த அளவில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் ஒரு திறப்பு விழா நிகழ்வாக இது மாறவுள்ளது.
கண்ணாடிப் பளிங்கு முகப்புடன், தனித்துவமான தோற்றமும், நிலைபேற்றியலை ஊக்குவிக்கும் வண்ணம் கட்டடத்தின் மேற்பரப்பில் பசுமையான சூழலையும் கொண்ட ஒரு கட்டடம் வெள்ளவத்தையில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் என்பது நிச்சயம். இக்கட்டடம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளதுடன், ஆடையணிகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் இங்கே பெற்றுக்கொள்ள முடியும். வழக்கமான தேவைகள், பண்டிகைக் காலத் தெரிவுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் என பலதரப்பட்ட தெரிவுகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. மிகவும் இட வசதி கொண்ட வாகனத் தரிப்பிடத்தை இது கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் அனைவரும் சௌகரியமாக இங்கே வருகை தந்து வேண்டியவாறு தமது கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்.
நடிகை பூஜா ஹெக்டே அவர்களுடன் இணைந்து, மதீஷ பத்திரண, பெத்தும் நிசங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் போன்ற பிரபலமான கிரிக்கெட் வீரர்களும், உள்நாட்டு தொலைக்காட்சிப் பிரபலமான தர்ஷன் தவராஜா போன்றவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு, முற்பதிவுகளை மேற்கொள்ளும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு அரிய வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கான பதிவுகளை 2026 நவம்பர் 9 வரை மேற்கொள்ள முடியும்.
“கொழும்பு ஆட்களுக்கு... கொழும்பு 6க்கு” என்ற விளம்பரப் பிரச்சாரமொன்றும் இத்திறப்பு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவ்விளம்பரம் மக்கள் மத்தியில் இப்புதிய காட்சியறை தொடர்பாக பலத்த ஆவலைத் தூண்டியுள்ளது.
1993ல் இயங்க ஆரம்பித்த Sriyani Dress Point, கேகாலை, குருநாகல், கண்டி, மாத்தளை, நீர்கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய நகரங்களில் மொத்தமாக எட்டுக் காட்சியறைகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மற்றும் கண்டி நகரங்களில் தலா இரு காட்சியறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது விற்பனைப் பயணத்தில் கொடிகட்டிப் பறக்கும் அதன் சிறப்பிற்கு மற்றுமொரு அங்கீகாரமாக Pinnacle Awards 2025 என்ற விருதுகள் நிகழ்வில் மிகவும் பிரபலமான சில்லறை விற்பனை நிறுவனம் என்ற விருதை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்படுகின்றமை அதன் வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு திருப்புமுனையின் ஆரம்பமாக மாறியுள்ளது. தற்போது கொழும்பு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள வாடிக்கையாளர்கள் இங்கே வருகை தந்து ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் தேவையானவற்றை ஒரே கூரையின் கீழ் மிகவும் சௌகரியமாகக் கொள்வனவு செய்ய வாய்ப்புக் கிட்டியுள்ளது.
































