Nov 6, 2026 - 04:44 PM

வாடிக்கையாளர்கள் புதிய Toyota வாகனமொன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதை மேலும் இலகுவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நோக்கில், கவர்ச்சிகரமான குத்தகைத் திட்டங்களை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கி மற்றும் Toyota லங்கா ஆகியன தமது மூலோபாயக் கூட்டுறவை மீளப் புதுப்பித்துள்ளன. விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகள் மற்றும் பெறுமதி சேர் நன்மைகள் ஊடாக வளர்ச்சியை முன்னெடுப்பதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பினை இது வெளிப்படுத்துகின்றது.
இவ்வொப்பந்தத்தின் கீழ், கொமர்ஷல் வங்கியானது மிகக் குறைந்த வட்டி வீதங்களையும், வாடிக்கையாளர்களின் வருமான ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட மீள்செலுத்தல் திட்டங்களையும் வழங்கவுள்ளது. அத்துடன், Toyota வாகனங்களுக்காக குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள், வங்கியினால் வழங்கப்படும் கடனட்டைகளுக்கான இணைப்பு மற்றும் ஆண்டுக் கட்டணங்களை முதல் இரண்டு வருடங்களுக்கு முழுமையாக விலக்களிக்கும் சலுகையையும் பெறுவர்.
Toyota வாடிக்கையாளர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட மீதிப் பெறுமதி மீள்செலுத்தல் (Residual value repayment) தெரிவுகளின் ஊடாகப் பயனடைய முடியும். இத்தெரிவானது வாகனத்தின் பெறுமதியில் ஒரு வருட காலத்திற்கு 50% வரையிலும், ஐந்து வருட கால தவணைக்கு 30% வரையிலும் குத்தகைக் காலத்தின் முடிவில் செலுத்தும் வகையில் பிற்போடுவதன் மூலம், மாதாந்த வாடகைக் கட்டணங்களை கணிசமான அளவில் குறைக்கின்றது.
மேலதிகமாக, கொமர்ஷல் வங்கி மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Ltd. ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவின் மூலம், இந்த ஏற்பாட்டின் கீழ் குத்தகைக்கு பெறப்படும் புத்தம் புதிய Toyota வாகனங்களுக்கு விசேட சலுகையொன்றும் வழங்கப்படும். நிதிசார் நெகிழ்வுத்தன்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், CIBL ஊடாகப் பெறப்படும் காப்புறுதிக் கொள்கைகளுக்கான பிரீமியம் தவணைக் கட்டணங்களை எவ்வித கையாளுமைக் கட்டணங்களும் இன்றி, 0% வட்டியில் 6 அல்லது 12 மாத இலகுத் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களாக மாற்றியமைக்க முடியும் என வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிதியியல் சலுகைகளுக்கு மேலதிகமாக, Toyota லங்கா நிறுவனம் இலவச வாகனப் பதிவு, முதல் மூன்று வழக்கமான பராமரிப்புச் சேவைகளை எவ்வித கட்டணமுமின்றி வழங்குவதுடன், மூன்று வருடங்கள் அல்லது 100,000 கிலோமீற்றர் (எது முதலில் வருகிறதோ அது) வரையிலான உற்பத்தியாளரின் உத்தரவாதத்தையும் வழங்கவுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட 270 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































