Nov 6, 2026 - 04:36 PM

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, இம்முறை
வெள்ளி விழாக் கண்ட தேசிய விற்பனை விருதுகள் (NSA) 2026 இல் 17 விருதுகளை சுவீகரித்து
சாதனை படைத்திருந்தது. ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால்
(SLIM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், நான்கு பிரதான
பிரிவுகளான – முன்களச் செயற்பாட்டு அதிகாரி, விற்பனை நிறைவேற்று அதிகாரி, விற்பனை
மேற்பார்வையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் ஆகிவற்றில் நான்கு தங்க விருதுகளை
சுவீகரித்த ஒரே தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்கும் நிறுவனமாக SLT-MOBITEL
தெரிவாகியிருந்தது.
SLT-MOBITEL தனது நிலையான மற்றும் மொபைல் செயற்பாடுகள் பிரிவில் மொத்தமாக 17
விருதுகளை வென்றிருந்தது. இதில் நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல
விருதுகள் மற்றும் ஐந்து மெரிட் விருதுகளும் அடங்கியிருந்தன. இதனூடாக நிறுவனத்தின்
விற்பனை நிபுணர்களின் திரண்ட ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு போன்றன
பிரதிபலிக்கப்பட்டிருந்தன.
SLT-MOBITEL இன் நுகர்வோர் விற்பனை பிரிவுக்கு இந்த மைல்கல் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த வெற்றியாக அமைந்திருந்ததுடன், விற்பனை சிறப்பில் முன்னோடி எனும் தனது
நிலையை மீளவும் உறுதி செய்திருந்தது. அதன் நான்கு தங்க விருதுகளுக்கு மேலதிகமாக, ஒரு
வெற்றி, மூன்று வெண்கலம் மற்றும் மூன்று மெரிட் விருதுகளையும் சுவீகரித்து, அதன் விற்பனை
செயலணியின் வலிமை, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான வினைத்திறன் ஆகியவற்றை
பிரதிபலித்திருந்தது.
இறுதிப்போட்டியாளர்கள் கடுமையான மதிப்பீடு மற்றும் பரிசீலனைச் செயன்முறைக்கு
உட்படுத்தப்பட்டதுடன், தேசிய விற்பனை விருதுகளின் (NSA) புகழ்பெற்ற நடுவர் குழுவினால்
நாட்டின் முன்னணி விற்பனைத் தொழில்வல்லுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெருமைக்குரிய
இந்நிகழ்வு, இலங்கையின் விற்பனைத் திறமைக்கான அளவுகோலாக அமைந்ததுடன், SLT-
MOBITEL இன் முன்னணி மற்றும் ஆதரவுக் குழுக்களின் உயர் தரம் மற்றும் அர்ப்பணிப்பையும்
வெளிப்படுத்தியது.
மொபிடெல் பிரைவட் லிமிடெட் நுகர்வோர் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் சிரேஷ்ட
பொது முகாமையாளர் சுகத் அபேசிங்க இந்த பெருமைக்குரிய கௌரவிப்பு தொடர்பில் கருத்துத்
தெரிவிக்கையில், “ஒரு அணியின் வெற்றி என்பது ஒருபோதும் தற்செயலாக நிகழ்வதன்று. அது
தொடர்ச்சியான செயல்பாட்டுத் திறன், இலக்கை நோக்கிய ஒழுக்கமான செயற்பாடுகள், கூட்டு
தொலைநோக்குக் பார்வை மற்றும் இணைந்து முன்னோக்கிச் செல்வதற்கான துணிவு
ஆகியவற்றின் வெளிப்பாடாகும். துல்லியம், பொறுமை மற்றும் அர்ப்பணிப்புடன் விற்பனைச்
சிறப்பிற்குப் புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ள, உயர் செயல்திறன் கொண்ட இலக்கு சார்ந்த
அணியை வழிநடத்துவதில் நான் மிகவும் பெருமையடைகின்றேன். தேசிய அளவில் கிடைத்துள்ள
இந்த உயர் அங்கீகாரமானது, எமது அணியின் வர்த்தகத் திறனுக்கான உறுதியான சான்றாகும்.
இந்த வெற்றியானது தொடர்ச்சியான உழைப்பு மற்றும் செயல்திறனில் தளராத கவனம்
செலுத்தியதன் மூலம் சாத்தியமானது. எமது தலைமையத்துவத்தின் சார்பில், இந்த சிறப்பான
மற்றும் தகுதியான சாதனையை எட்டிய குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
SLIM தேசிய விற்பனை விருதுகள் கடந்த 25 ஆண்டுகளாக இலங்கையின் முதன்மையான தளமாக
விளங்கி வருவதுடன், விற்பனைச் செயல்திறன், தலைமைத்துவம், புதுமை படைத்தல் மற்றும்
வணிக வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை அங்கீகரித்து வருகின்றது. NSA
2026 விருது விழாவானது, அடுத்த தலைமுறை விற்பனைத் தலைவர்களை ஊக்குவிப்பதையும்,
இலங்கையின் விற்பனை சமூகத்தின் தரத்தையும் தொழில்முறைத் திறனையும்
வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் விற்பனைச் சிறப்பிற்குப் புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ள
SLT-MOBITEL, உயர் திறன் கொண்ட திறமையாளர்களைத் தொடர்ந்து உருவாக்குவதையும், உயர்
செயல்திறன் பண்பாட்டைக் கொண்டு நடத்துவதையும், சேவைத் தரத்தை உயர்த்துவதையும்,
வாடிக்கையாளர்களுக்கும் நாட்டிற்கும் இணையற்ற மதிப்பை வழங்கி உறுதிப்படுத்துவதையும்
நோக்கமாகக் கொண்டுள்ளது.
































