Nov 6, 2026 - 04:18 PM

பதிவு செய்யப்பட்ட, முன்பே பயன்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத புதிய வாகனங்கள்
மற்றும் Foton ரக வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காகப் பல
பிரத்தியேக சலுகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், HNB PLC நிறுவனம் Indra Traders Pvt Ltd
நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்த லீசிங் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் பிரத்தியேக குறைந்த வட்டி விகிதங்களைப்
பெற்றுக்கொள்ள முடியும். தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் வருடத்திற்கான ஆண்டுக்
கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்ட HNB கிரெடிட் கார்ட் ஒன்றும் வழங்கப்படும். மேலும், HNB
General Insurance நிறுவனம் மிகவும் மலிவான, தள்ளுபடி செய்யப்பட்ட வாகனக் காப்புறுதித்
திட்டங்களை வழங்கவுள்ளது. இது வாகனத்தை வாங்கும் போதும் அதனைப் பராமரிக்கும் போதும்
வாடிக்கையாளர்களுக்குப் பெரும் பணச்சேமிப்பை வழங்கும்.
Indra Traders நிறுவனத்தின் மூலம் பதிவு செய்யப்படாத புதிய வாகனங்களை வாங்கும்
வாடிக்கையாளர்களுக்கு, இந்த கூட்டாண்மை மூலம் விரிவான விற்பனைக்குப் பின்னரான சலுகைகள்
வழங்கப்படுகின்றன. எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸிற்றுக்கு 2 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படும்.
ஹைபிரிட் பேட்டரிகளுக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களது வாகனப் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்காகப் பின்வரும்
சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். Indra Motor Spares மூலம் வாங்கப்படும் உதிரிப் பாகங்களுக்கு
10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். Indra Service Park நிறுவனத்தின் மூலம் முதலாம் ஆண்டில் மூன்று
முறை கட்டணமில்லா ஊழியர் சேவைகள் வழங்கப்படும். முன்பே பயன்படுத்தப்பட்ட வாகனங்களை
வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதலாம் ஆண்டில் ஆறு முறை வரை கட்டணமில்லா ஊழியர் சேவைகள்
வழங்கப்படுவதுடன், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸிற்கு 6 மாத கால உத்தரவாதமும் வழங்கப்படும்.
இந்தக் கூட்டாண்மை குறித்து HNBஇன் சிரேஷ்ட தவிசாளர் மற்றும் வாடிக்கையாளர் வங்கித்
தொழில்துறை பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம கருத்து தெரிவிக்கையில், ஒரு வாகனத்தை
வாங்குவது என்பது எமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் ஒரு மிக முக்கியமான முடிவாகும் என்பதை
நாங்கள் நன்கு அறிவோம். எனவே, Indra Traders நிறுவனத்துடனான எங்களது இந்தக் கூட்டாண்மை
மூலம், எளிதான லீசிங் நிதியுதவியையும், வாகனப் பராமரிப்புக்கான நீண்டகாலச் சலுகைகளையும்
ஒன்றிணைத்து, அவர்களின் அந்தப் பயணத்தை மேலும் எளிதாக்க நாங்கள் விரும்புகிறோம். எமது
வாடிக்கையாளர்கள் தங்களது அடுத்த வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களுக்குக் கூடுதல்
தேர்வுகள், தன்னம்பிக்கை மற்றும் முழுமையான நிம்மதியை வழங்குவதே எங்களின் முக்கிய
நோக்கமாகும். என தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மை குறித்து Indra Traders Pvt Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷான்க
சில்வா கூறுகையில், HNB போன்ற ஒரு நம்பகமான நிதி நிறுவனத்துடன் கைகோர்ப்பது, எமது
வாடிக்கையாளர்கள் ஒரு முக்கியமான வாகனக் கொள்வனவை மேற்கொள்ளும் போது அவர்களுக்குக்
கூடுதல் நம்பிக்கையை வழங்குகிறது. HNB வங்கியின் நம்பகமான நிதிச் சேவைகளையும், எங்களது
வாகனங்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான விரிவான பராமரிப்புச் சலுகைகளையும் ஒன்றிணைப்பதன்
மூலம், வாகனத்தை வாங்கும் செயல்முறையை நாங்கள் எளிதாக்குகிறோம். இந்தத் திட்டமானது எமது
வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் அதிகப் பலன் தரும் அனுபவத்தை உருவாக்கும் என்று நாங்கள்
உறுதியாக நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
































