Oct 28, 2026 - 02:00 PM

MAXXIS நிறுவனத்தின் ‘MAXXIS Champions of Champions 2025’ எனும் கருப்பொருளின்கீழ் நடைபெற்ற வருடாந்த விருது வழங்கும் விழா, 2026 அக்டோபர் 23 அன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டல் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் MAXXIS International Taiwan நிறுவனத்தின் பிரிவு முகாமையாளர் திரு. கென்னி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் கௌரவ விருந்தினராக MAXXIS International Taiwan நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி திரு. ஜிம்மி கலந்துகொண்டார்.
பிரதம விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினருடன் இணைந்து, Tyre House Group தலைவர் திரு. லெஸ்லி பொன்சேகா, முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சுனில் பொன்சேகா , குழுமப் பணிப்பாளர் திரு. கயான் பொன்சேகா , பணிப்பாளர் திருமதி. காந்தி தலகல மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. ரொஹான் பீரிஸ் ஆகியோர் பாரம்பரிய மங்கல விளக்கேற்றி விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
சுமார் 200 MAXXIS விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்ட இந்த விழாவில், 60 விநியோகஸ்தர்கள் விருதுகளுக்காகப் பரிசீலிக்கப்பட்டனர். இதில் 2025 ஆம் ஆண்டின் சிறந்த வெற்றியாளராக கொழும்பு 14 ஐச் சேர்ந்த Wijaya Motors & Tyre House (Pvt) Ltd. தெரிவுசெய்யப்பட்டது. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சஜித் சங்கலனவிடம் Maxxis International Taiwan நிறுவனத்தின் பிரிவு முகாமையாளர் திரு. கென்னி, Tyre House Group இன் லெஸ்லி பொன்சேகா மற்றும் சுனில் பொன்சேகா ஆகியோருடன் இணைந்து வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார்.
இரண்டாவது இடத்திற்கான விருதை கொழும்பு 02 ஐச் சேர்ந்த U&H Wheels Service (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வசந்த பெரேரா பெற்றுக்கொண்டதுடன், மூன்றாவது இடத்திற்கான விருதை களனி Mount Wheel Tyre Center நிறுவனத்தின் திரு. துலஞ்சன் பெரேரா பெற்றுக்கொண்டார்.
MAXXIS விநியோகஸ்தர்களிடையே காணப்படும் சிறப்புத்தன்மை, புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த விழாவானது, டயர் தொழில்துறையில் ஆரோக்கியமான போட்டி மற்றும் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

































