Oct 28, 2026 - 02:32 PM

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குக்குரிய பூர்வாங்க வழக்கு விசாரணையை (Pre-trial conference) முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இந்த கட்டளையைப் பிறப்பித்தார்.
உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் 'ஊழல்' குற்றம் புரியப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

































