Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

    Mobitel Inner 1278

    பிரபல பின்னணி பாடகியும் சர்ச்சை நாயகியுமான சுசித்ரா, தனது அதிரடி மற்றும் வெளிப்படையான பேச்சுகளால் எப்போதும் சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பக்கூடியவதாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் திரைப்படங்கள் மற்றும் அவரது கதாபாத்திர அமைப்புகள் குறித்து சுசித்ரா வெளியிட்டுள்ள கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் தீயாக பரவி மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.


    திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் 'டாக்சிக் லவ்' குறித்து பேசிய பாடகி சுசித்ரா, ஆங்கிலத் திரைப்படங்களில் இதுபோன்ற 'டாக்சிக் லவ்' கதைகள் அதிகமாக இடம்பெற்றாலும், தமிழில் இந்த மாதிரியான கதைக்களங்களை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுவது மிகவும் குறைவுதான். ஆனால், தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் படங்களைப் பார்க்கும்போது, தவறான விஷயங்களையும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையும் உயர்த்தி பிடிக்கும் படங்களை என்னால் ஒருபோதும் ஏற்றுகொள்ளவே முடியாது.


    பிரதீப் ரங்கநாதன் தனது திரைப்படங்களில் உணர்வுப்பூர்வமாக மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாத ஒரு நபராகவே தொடர்ந்து தன்னைச் சித்தரித்துக் கொண்டே நடிக்கிறார். ஆனால், அவரின் பின்னால், பொண்ணுங்க கியூவுல நிக்கிற மாதிரி காட்டுவதை பார்க்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இப்படி தொடர்ந்து படங்களில் காட்டுவது முற்றிலும் தவறான விஷயம்.


    இது பார்வையாளர்களுக்கு மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். நாம் இதைவிட சிறந்த மனிதர்களை பற்றியும், நல்ல கருத்துகளை பற்றியும் பேச வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள நல்ல கதைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. என பிரதீப் ரங்கநாதனின் திரைப்படங்கள் குறித்து தனது கடுமையான அதிருப்தியை பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில் பேசி உள்ளார்.


    இயக்குநராக அறிமுகம் ஆனா பிரதீப் ரங்கநாதன், ரவி மோகனை வைத்து கோமாளி என்ற படத்தை இயக்கினார்.


    அதைத்தொடர்ந்து, நடிகராக லவ் டுடே படத்தில் நடித்தார். அதன் பின், டிராகன், டியூட் போன்ற படங்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.